இலங்கை, கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் கொவிட்-19 தடுப்பூசியை பெறுவதற்கான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள இலங்கை அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது.
கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியுடன் இலங்கை ஏற்கனவே இணைந்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் கோவிட் 19 தடுப்பூசிகளைப் பெற இலங்கை தகுதியுடையது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்நிலையில் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஆரம்ப விண்ணப்பத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதா சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது அமைச்சரவை ஆய்வறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த செயல்முறையின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தடுப்பூசியை பெறுவதற்கான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கமைய தற்போது இவ் ஒப்பத்ததிற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.