சுலைமானி படுகொலைக்கு பலி தீர்க்க அமெரிக்காவை மிரட்டும் ஈரான்!

Reuters

ஈரான் உயர்மட்ட தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு நாள் ஜனவரி 3ம் திகதி அனுஷ்டிக்கப்பட நிலையில் ஈரான் அமெரிக்காவை மிரட்டும் தொனியில் தனது இராணுவ பலத்தை வெளிப்படுதிவருகின்றது.

அந்தவகையில், இம்மாதம் 2 ஆம் திகதி அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகணைகள் மற்றும் கழுகுகள் தாக்குதல் நடத்தி அழிக்கும் திகிலூட்டும் கிராபிக்ஸ் காணொளி காட்சியை யூடியூபில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

139 வினாடிகளில் உருவாக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகள், ‘The Great Revenge’ என அழைக்கப்படுகின்றன, குறித்த காணொளியில் அமெரிக்க இராணுவ தளத்தை நோக்கி ஏவுகணைகள் பாய்ந்து சென்றது தாக்குகிறது.

இராணுவ தளத்தில் பல்வேறு பகுதிகள் எரிந்து புகை வருவதற்கு மத்தியில் பல கழுகுகள் அமெரிக்க படைவீரர்களைத் தாக்குகின்றன.

இறுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட டிரம்ப் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கழுகு ஒன்று அமெரிக்க வீரரின் உடலை தூக்கி வந்து அவரின் முன் போட்விட்டுச் செல்கிறது.

Drones are seen during a large-scale drone combat exercise of Army of the Islamic Republic of Iran, in SemnanReuters

இவ் காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக, ஈரான் முதல்தடவையாக தமது நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

செம்னான் பிராந்தியத்தில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சிகளின் போது ஈரான் நூற்றிற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை காட்சிப்படுத்தியுள்ளதுடன் அவற்றை சோதனை செய்துள்ளது.

Iranian Armed Forces Chief of Staff Major General Mohammad Bagheri and other top commanders inspect drones as they are prepared for large-scale drone combat exercise of Army of the Islamic Republic of Iran, in SemnanReuters

இந்நிலையில் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு தாங்கள் தயார் என்பதை எமது படையினர் நிரூபிப்பர்கள் என ஈரானிய இராணுவத்தின் பிரதி தலைவர் முகமது பகேரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுலைமானி படுகொலைக்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டு வரும் வரை ஈரான் ஓய்வெடுக்காது என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சு தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதியளித்து.

இதனை செயற்படுத்தும் வகையில் ஈரான் தனது இராணுவ நகர்வுகளை முன்னெடுத்துள்ளமை அமெரிக்காவுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles