உலகம்

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் : 1500 மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக இதுவரை 1500க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேரளா மாநிலம், கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்துப் பண்ணையில் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கி உள்ளது.

இதையடுத்து இந்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ‘‘நோய் அறியப்பட்ட பகுதியில் பறவைப் பண்ணை வைத்திருப்பவர்கள், வளர்ப்பு பறவைகளை அழித்து நோய்ப்பரவலை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அழிக்கப்படும் பறவைகளுக்கான இழப்பீட்டை அரசு வழங்கும்’’ என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள அரசு பறவை காய்ச்சல் மாநில பேரிடர் என பிரகடனம் செய்துள்ளது. இதற்கிடையில் ஆலப்புழா மாவட்டத்தில் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5என்8 வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதுயதையடுத்து அதிகமான பறவைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles