உலகம்

நாய் படுத்து உறங்கியதால் நன்குமாத குழந்தை பரிதாப பலி!

நன்குமாத குழந்தை மீது நாய் படுத்து உறங்கியதால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் டேட்டன் பகுதியில் உள்ள ஒரு குடும்பம் தமது வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாயினால் பிறந்து நன்கு மாதமேயான குழந்தை இழந்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் பெற்றோர் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் விழித்து பார்க்கும் போது குழந்தையின் மீது நாய் உறங்கிக்கொண்டிருந்துள்ளது.

உடனடியாக குழந்தையின் தந்தை நாயை அப்புரப்படுத்தி குழந்தையை தூக்கியுள்ளார்.

இதன் போது குழந்தை மூச்சின்றி காணப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் மீது நாய் படுத்து உறங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்திருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வீடுகளில் குழந்தைகள் போன்று செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன இதனால் இது போன்ற பல விபரீத சம்பவங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

Hot Topics

Related Articles