சர்வதேச கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தை DHL ஆரம்பித்துள்ளது

உலகின் முன்னணி சரக்கு கையாளல் வர்த்தக நாமமான DHL, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தடுப்பு மருந்து விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

தம் நாட்டு மக்களின் பாவனைக்காக இஸ்ரேல் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய DHL Express மற்றும் DHL Global Forwarding மூலமாக முதல் தொகுதி தடுப்பூசிகள் அந்நாட்டிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதி தடுப்பூசிகளை டெல்-அவிவ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து> அந்நாட்டின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பெற்றுக் கொண்டார்.

 

Deutsche Post DHL குழுமத்தின் சர்வதேச சரக்குக் கையாளல் விசேடத்துவ பிரிவான DHL Global Forwarding இனால் மேலதிக நோய்த் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக விசேட மேலதிக விமான சேவைகளை செயற்படுத்தியுள்ளதுடன் தொடர்ந்தும் அவற்றை இயக்கவுள்ளது.

“பல மாத காலமாக தயார்ப்படுத்தியிருந்ததைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியில் நோய்த் தடுப்பூசிகளை விநியோகிக்க எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

எமது சரக்குக் கையாளல் நிபுணத்துவ அனுபவத்தினூடாக, சர்வதேச ரீதியில் நோய்த் தடுப்பூசிகளை சீராக விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் என கருதுகின்றோம்.

தற்போதைய நிலையற்ற சூழலில், உலக நாடுகள் தமது சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள அவசியமான பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகள் மற்றும் பரிசோதனை தொகுதிகள் போன்றவற்றைக் கொண்டிருப்பது எந்தளவுக்கு முக்கியமானது என்பது தெளிவாகியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான எமது பொதுப் போரhட்டத்தின் அடுத்த கட்டத்தில் தற்போது நாம் காலடி பதித்துள்ளோம்.

220 நாடுகளைச் சேர்ந்த எமது அணியினர், உலகின் எந்தப் பகுதிக்கும், எவ்வேளையிலும் இந்த நோய்த்தடுப்பூசிகளை விநியோகிக்கத் தயாராகவுள்ளனர்.” என   DHL Express இன் சர்வதேச வலையமைப்பு செயற்பாடுகள் மற்றும் விமான சேவைகள் தலைமை அதிகாரி ட்ராவிஸ் கொப் தெரிவித்தார்.

DHL Global Forwarding இன் சர்வதேச விமான சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி தோமஸ் மெக் கருத்துத் தெரிவிக்கையில்,

 

“கொரோனா வைரசுக்கு எதிரான நோய்த்தடுப்பூசி கண்டுபிடிப்பு என்பது மிகவும் முக்கியமான விடயம் என்பதுடன், சர்வதேச விநியோக சேவை வழங்குநர் எனும் வகையில், இவற்றை உலக நாடுகளுக்கு விநியோகிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்.

எமது சரக்கு கையாளல் நிபுணத்துவம், வாழ்வியல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு துறை ஆகியன இணைந்து கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்குகின்றோம்.

மக்களை இணைப்பது மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துதல் போன்ற Deutsche Post DHL குரூப்பின் கொள்கைளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன’’ என்றார்.

இஸ்ரேலுக்கான முதல் விமான சேவையைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்திலிருந்து உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குத் தமது செயற்பாட்டு மையங்களினூடாக விமான சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விநியோக செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில், DHL இன் பிரத்தியேகமான சர்வதேச வலையமைப்புகளில் 9000 க்கும் அதிகமான நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.

இதனூடாக மருந்தாக்கல், மருத்துவ சாதனங்கள், பரிசோதனைகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் விநியோகத்தர்கள், வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநர்கள் டிஜிட்டல் மயமாக்கத்துடன் இணைந்துள்ளதுடன், இந்தப் பணிகள் சீராக இடம்பெறுவதை உறுதி செய்கின்றனர்.

சுகாதார பராமரிப்பு துறைக்காக 150ற்கும் மேற்பட்ட மருந்தாக்குநர்கள், 20ற்கும் மேற்பட்ட பரிசோதனை ஆய்வகங்கள், 100ற்கும் மேற்பட்ட சான்றளிக்கப்பட்ட நிலையங்கள், 160 ற்கும் மேற்பட்ட GDP தகைமை பெற்ற களஞ்சியசாலைகள், 15 ற்கும் மேற்பட்ட GMP-சான்றுபெற்ற தளங்கள், 135ற்கும் மேற்பட்ட medical express தளங்கள் மற்றும் நேரம் திட்டமிடப்பட்ட சர்வதேச வலையமைப்பு விநியோக சேவைகள் போன்றன 220 நாடுகளில் காணப்படுகின்றன.

சர்வதேச ரீதியில் பெருவாரியான சரக்கு விநியோகத்தில் ஈடுபடுவோர், தமது மருந்துப் பொருட்கள் விநியோக வலையமைப்பினூடாக, 10பில்லியன் அளவிலான நோய்த்தடுப்பூசிகளை விநியோகிக்க வேண்டிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழு உலகையும் உள்வாங்கி இந்த விநியோகத்தில் இணைப்பதற்கு, 200,000 வரையான pallet shippers மற்றும் 15 மில்லியன் கூலிங் பெட்டிகள் மற்றும் 15,000 விமான சேவைகள் போன்றன அவசியமாகும்.

260 க்கும் அதிகமான விமானங்கள், பங்காளர் விமான சேவைகள் மற்றும் மத்திய நிலையங்கள் ஆகியவற்றுடன 220க்கும் அதிகமான நாடுகளில் வலையமைப்பைக் கொண்டுள்ள DHL, சர்வதேச ரீதியில் கொவிட்-19 நோய்த் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கு தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.

சாதாரணமாக தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கு சுமார் 5 முதல் 20 வருடங்கள் ஆகின்ற நிலையில், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான தடுப்பூசி ஒரு வருட காலப்பகுதிக்குள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 நோய்த்தடுப்பூசிகள் வெப்பநிலை கட்டுப்பாட்டில் பேணுவது அவசியமானதாகும் (-80°C வரை).

இவற்றை கொண்டு செல்லல் மற்றும் களஞ்சியப்படுத்தி வைக்கும் போது அவ்வாறான வெப்பநிலைகளை பேண வேண்டியதும் முக்கியமானதாகும்.

 

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...