உலகம்

கொவிட்டுக்குப் பின்னரான மிகச் சிறந்த புத்தாக்கத்திற்கான விருதை’ DFCC வங்கிக்கு

SLASSCOM RPA Awards 2020 2020 விருதுகள் நிகழ்வில் ‘கொவிட்டுக்குப் பின்னரான மிகச் சிறந்த புத்தாக்கத்திற்கான விருதை’ DFCC வங்கி வென்றுள்ளது

ஓஓ டிசம்பர் 2020: இலங்கையின் முதன்மை வணிக வங்கியான DFCC வங்கி, இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான சங்கத்தின் (Sri Lanka Association for Software Services Companies – SLASSCOM) ஏற்பாட்டில் இடம்பெற்ற RPA Awards 2020 விருதுகள் நிகழ்வில், கொவிட்டுக்குப் பின்னரான மிகச் சிறந்த புத்தாக்கத்திற்கான பெருமதிப்பிற்குரிய விருதை வென்றதன் மூலம் ‘அனைவருக்கும் ஏற்ற வங்கி’ என்ற தனது உறுதிப்பாட்டை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

தங்குதடையின்றிய தொடர்ச்சியான வணிகப் பிரிவின் கீழ், இந்த இனங்காணல் அங்கீகாரமானது ‘தானியங்கி கடன் திருப்பிச் செலுத்தும் சலுகைக்காலம்’ (Automated Debt Moratorium) முயற்சிக்காக கிடைக்கப்பெற்றுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அல்லது வணிகங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக்காலத்தை வழங்கும் செயல்முறையை இந்த முயற்சி தன்னியக்கமயப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Automated Debt Moratorium (ரோபோ செயல்முறை தன்னியக்கமயமாக்கம் – Automated Debt Moratorium) விருதுகள், இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் மிகவும் தனித்துவமான ஒரு நிகழ்வாகும்.

சரியான நேரத்தில் சிறப்பான முயற்சிகள் மூலம் உலகிற்கு புத்தாக்கத்தின் மூலமாக மீள்வரைவிலக்கணம் அளிப்பதில் ஒன்றிணைந்த வணிகங்களை இனங்கண்டு அவற்றுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதும் இந்த விருதுகள் நிகழ்வில் அடங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கு மத்தியில், விருதுகள் நிகழ்வு இணையத்தினூடாக மெய்நிகர் முறையில் இடம்பெற்றது. Automated Debt Moratorium’ என்ற கற்கை ஆய்வுக்காக ‘கொவிட்டுக்குப் பின்னரான மிகச் சிறந்த புத்தாக்கம்’ என்ற மதிப்புமிக்க விருதை DFCC வங்கி தனதாக்கியுள்ளது.

இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்திய சுற்றறிக்கையின்படி, கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை DFCC வங்கி முன்னெடுத்தது. 10,000 இற்கும் மேற்பட்ட கடன்களுக்கு அவற்றைத் திருப்பிச் செலுத்துவற்கான சலுகைக் காலம் வழங்கப்பட்டது.

இந்த கடினமான செயல்முறையை மனிதரீதியாக செயல்வடிவாக்க 145 மனித நாட்களுக்கு மேல் எடுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள அதே நேரத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பில் வங்கி மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த செயல்முறைக்கு தேவைப்படும் நாட்கள் தொடர்பில் கூடுதல் சவால்களையும் ஏற்படுத்தின. இது RPA மூலம் இந்த செயல்முறையை தன்னியக்கமாக்கும் தீர்மானத்திற்கு வழிவகுத்தது.

இது எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், கடனைத் திருப்பிச் செலுத்தும் சலுகைக்காலம் தொடர்பான தகவல் விபர புதுப்பிப்புகளின் செயல்திறன் மற்றும் துல்லியத்தையும் மேம்படுத்தியது.

வங்கி முகங்கொடுத்த நேர முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் இந்த சிக்கலான செயல்முறையை வெற்றிகரமாக அமுல்படுத்தியிருந்தமை இதனை ஒரு கற்கை ஆய்வாக thf SLASSCOM RPA Awards விருதுகள் நிகழ்வில் முதலிடம் பெற உதவியதுடன், இது வங்கித் துறையில் ஏனையவர்களுக்கான ஒரு முன்னுதாரணத்திற்கும் வழிகோலியுள்ளது.

இந்த விருது குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில் Automated Debt Moratorium’ ’ முயற்சிக்கு SLASSCOM வழங்கிய அங்கீகாரத்தையிட்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

எங்கள் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த வங்கி அனுபவத்தை மேம்படுத்துவதற்காக DFCC வங்கி தொடர்ந்து தனது செயல்முறைகளில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க முயன்று வருவதுடன், இந்த அங்கீகாரம் அந்த வாக்குறுதியை மேலும் நிரூபிக்கிறது.

வளர்ச்சி கண்டு வருகின்ற மற்றும் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக புரட்டிப்போடும் ஆற்றல் மிக்க தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு நாம் முன்னுரிமையளித்துள்ளதுடன், 2019 ஆம் ஆண்டில் DFCC வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற பல தொழில்நுட்பங்களில் RPA உம் ஒன்றாகும், இது பல்வேறு செயல்முறைகளை தன்னியக்கமாக்க உதவியது.

இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட அறிவு, தொற்றுநோய் காலத்தில் எழுந்த சவால்களுக்கு விரைவான பயன்பாட்டுத் தீர்வுகளை வெளிக்கொண்டு வர எமக்கு இடமளித்துள்ளது.

இப்போது, எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை நாம் இரு தரப்புமே உறுதிப்படுத்த முடிவதுடன், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் வழங்கவும் உதவுகிறது.

Hot Topics

Related Articles