உலகம்

650 அடி உயர மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த காதலியை காப்பாற்ற முயன்ற காதலன்!

தனது காதலை தெரிவித்த அடுத்த சில நிமிடங்களில் 650 அடி உயர மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த காதலியை காதலன் மலையிலிருந்து பாய்ந்து காபாற்ற முயன்ற சம்பவம் ஆஸ்திரியாவில் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் கரீந்தியா நகரில், 27 வயது நிறைந்த இளைஞன் தனது 32 வயது காதலியிடம் காதலை தெரிவிப்பதற்காக பால்கெர்ட் என்ற 650 அடி உயர மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர் தனது காதலை தெரிவிக்கவே காதலியும் அதனை ஏற்று கொண்டார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண் 650 அடி உயர மலை உச்சியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத அவரது காதலன், தனது காதலியை காப்பாற்ற அவரை பிடித்து கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்க வில்லை.

The woman, 32, survived the plummet from the Falkert mountain in Carinthia, Austria, after her 27-year-old partner's proposal on December 27 (pictured: Rescuers on the mountain)
இதனையடுத்து இருவரும் சறுக்கியப்படி 320 அடி சென்றுள்ளனர். அது மலையிலிருந்து செங்குத்தாக 50 அடி உயரத்தில் வைத்து காதலன் ஒருவாறு மலை முகட்டை பிடித்து கொண்டு அதில் தொங்கியபடி இருந்துள்ளார்.

கீழே விழுந்த காதலி மேலும் 100 மீட்டர் தூரத்தில் சறுக்கி பனிக்கட்டிகள் மீது விழுந்துள்ளார்.

பால்கெர்ட்சி ஏரிக்கு அருகே அசைவற்று கிடந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இதேவேளை, காதலரை மீட்க ஹெலிகாப்டர் ஒன்றும் வரவழைக்கப்பட்டது. அவரும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The couple had trekked to the top of the mountain (pictured) before the proposal. They plunged over the edge after the woman lost her footing
650 அடி உயர மலை உச்சியில் இருந்து விழுந்து, பெண் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் மீண்டும் சந்தித்ததில் காதலில் மீண்டும் உறைந்து போனார்கள்.

“இருவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்! பனிப்பொழிவு இல்லாதிருந்தால், அது மிகவும் வித்தியாசமாக மாறியிருக்கும்” என்று சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles