உலகம்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் சாதகமான முடிவு!

இலங்கையில் அன்மைகாலமாக சர்ச்சையை ஏற்படுத்திவந்த கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் சாதகமான முடிவை நேற்று வெளியிட்டுள்ளது.

முக்கியமாக முஸ்லிம் பிரஜைகள் தமது ஜனாசாக்களை தகனம் செய்வதில் அதிருப்பதியை வெளியிட்டதுடன் அது தமது மதத்திற்கு ஏற்புடையது அல்ல என தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துவந்தனர்.

அவர்களுக்கு அதரவாக இலங்கையில் பல தரப்பினரும் குரல் எழுப்பியதுடன் உலகளாவிய சமூகநல அமைப்புகளும் தமது கண்டனத்தைதெரிவித்து வந்தன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் நபர்களின் சரீரங்களை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரியதல்ல என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

தமது சங்கம் மேற்கொண்ட பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கருத்தினை வெளியிட முடிவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸானது சுவாசக் குழாய் ஊடாக பரவுகின்றதே தவிர, வயிற்றுப்பகுதியில் வேறு முறைமையில் பரவ முடியாது என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வைரஸ்கள் உயிரணுக்களைத் தவிர, சரீரங்களில் நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்றும் சரீரங்கள் மீதான பி.சி.ஆர் பரிசோதனையில்,

தொற்றுறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டாலும், அதிலிருந்து வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என இலங்கை மருத்துவ சங்கம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மரணித்தவரின் சரீரத்தை அடக்கம் செய்வதன் ஊடாக நீர் ஆதாரங்களின் மூலமாக வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அறிவியல் பூர்வமான தகவல்களுக்கு அமைய, கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை இந்த நாட்டில் அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்க முடியும் என்பது தமது கருத்தாகும் என மருத்துவ கல்வி மேம்பாட்டுக்காக தற்போதுள்ள மருத்துவர்களின் நிறுவனமான இலங்கை மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.

எனினும், பழைய வைரஸானது சுற்றுச்சூழலில் இருந்து மீண்டும் உருவாகுமா என்பது தொடர்ந்தும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் நீண்டநாள் நிலவிவரும் பிச்சினைக்கு தீர்வு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என மற்றுமொரு தரப்பு போரட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles