உலகம்

முதல் மந்திரியை கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டொலர் பரிசு: பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி

இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கைக் கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து வழிகாட்டி வரைபடத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒன்று மொஹாலி பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டி டிசம்பர் 31 அன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அச்சுறுத்தலுக்கு காரணமான நபர்களை கைது செய்ய பொலிசார் அந்த பகுதியில் இருக்கும் சி.சி.ரி.வி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொஹாலி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Hot Topics

Related Articles