உலகம்

மாரடைப்பால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான பறவைகள் – புத்தாண்டு தினத்தில் இத்தாலியில் சோகம்

புது வருட தினத்தில் இத்தாலியின் ரோம் நகரின் வீதிகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக்கிடந்தமை உலகளாவிய ரீதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு தினத்தின் அதிகாலையில் ரோம் நகரின் சாலையில் நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடப்பதைப் பார்த்து பலர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை ஒருவர் காணொளியாகபதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

A flock of starlings flies over Rome's skyline and the dome of St. Peter's Basilica at dusk.
அந்த பதிவில்

“நண்பர்களே, நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்து கிடக்கின்றன. இதை பார்ப்பதற்கு கவலையாக உள்ளது, நம்ப முடியாததுமாக உள்ளது. நாம் வெடித்த பட்டாசுகளே இதற்கு காரணம்” என அவர் தெரிவித்தார்.

இந்த காணொளி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச விலங்கு பாதுகாப்பு அமைப்பு, பறவைகள் சாவுக்கு பட்டாசுகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் லோரொடானா டிக்லியோ கூறுகையில் “பறவைகள் அதிக பட்டாசு சத்தத்தால் பயந்து இறந்திருக்கலாம்.

திடீரென்று பட்டாசு வெடிக்கும்போது பறந்து கொண்டிருக்கும் பறவைகள் சத்தத்தில் நிலைகுலைந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்; சுவர்கள், ஜன்னல்கள், மின் இணைப்புகளில் மோதிவிடும்; ஏன் பறவைகள் மாரடைப்பால் கூட இறந்து போகக்கூடும்” என்றார்.

Hundreds of birds drop dead in Rome after New Year's Eve fireworks display
இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டதுடன் ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் தடைகளை மீறி பலர் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடியிருந்தனர்.

Hot Topics

Related Articles