உலகம்

உமேஷ் யாதவுக்குப் பதில் இந்தியா அணியில் இடம்பெறவுள்ள நடராஜன்!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிகெட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் 2ஆவது இன்னிங்சில் 3.3 ஓவர் மட்டுமே பந்து வீசிய நிலையில் உமேஷ் யாதவ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார்.

பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு கணுக்கால் தசைநாரில் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், அவருக்கு பதிலாக கூடுதலாக தற்போது வலைபயிற்சி பந்து வீச்சாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் உமேஷ் யாதவின் காயம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.

Hot Topics

Related Articles