உலகம்

மறக்கவேண்டிய நினைவுகளை தந்த 2020 ஆண்டில் நினைக்க வேண்டிய 10 விடயங்கள்!

2020 ஆண்டு உலக மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட ஒரு ஆண்டு. 2020 கவலைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் அளவே இல்லை எனலாம்.
கடந்து போகும் இந்த ஆண்டில் மறக்கவேண்டிய பல நினைவுகளை மறந்து நினைக்க வேண்டிய சில நல்ல நினைவுகளுடன் 2021 ஐ வரவேற்கலாம்.

புதிய நம்பிக்கை
இதில் முதலாவதாக கொரோான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அனைவரது மனதிலும் 2021 ஆண்டு தொடர்பில் புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளன. எனவே கொரோான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டின் ஒரு சிறப்பாகும்.

ஒப்பீட்டளவில் 2020 விலங்குகளுக்கு நன்மையான ஆண்டாகும்.
கொரோனா தொற்று உலகை இன்னமும் முழுதாக விட்டகலாத நிலையில், இவ் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக சீனா மனித நுகர்வுக்காக வனவிலங்குகளின் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் தடைசெய்தது.
அத்துடன் நாட்டின் பாரம்பரிய மருந்தகத்திலிருந்து பாங்கோலின் செதில்களையும் அகற்றியது.

“ஹீரோஸ்” என்ற வார்த்தைக்கு புதிய வரையறை கிடைத்தது.
முன்னதாக திரைப்பட நடிகர்களுக்கு பயன்படுத்தப்படும் “ஹீரோ” என்ற வார்த்தை கொரோனா உலகளாவிய நெருக்கடியை தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட “அத்தியாவசியமானது” என்று கருதப்படும் ஒவ்வொரு தொழில்ததுறையைச் சேர்ந்தவருக்கும் “ஹீரோ” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

மனித உணர்வுகளுக்கு திரும்பிய மனிதன்!
இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த மனிதர்களை மனித உணர்வுகளுக்கு திரும்பவும் அழைத்துச் சென்றது.
இணையத்தளம், வேளை, உள்ளிட்ட விடயங்களிலிருந்து சற்று விலகி குடும்பம், நண்பர்கள், அயலவர்கள் ஆகியோருடன் மீண்டும் தொடர்பு கொள்ள வழிவகுத்தது.
இருப்பதை வைத்து வாழ்வதற்கும் துரித உணவை மறந்து ஆரோக்கியமாக சமைத்து உண்பதற்கும் மனிதனை கட்டாயமாக பழக்கப்படுத்தியது.

 மனநல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை!
மனநல ஆரோக்கியம் குறித்து முன்பை விட இப்போது இதிக அக்கரையுடன் பேசப்பட்டுவருகின்றது. பல நிறுவனங்கள் மனநல சுகாதார அவசியத்தை புரிந்து கொண்டுள்ளன, மேலும் தங்கள் ஊழியர்களுக்கு மனநலத்தை மீளப்பெறுவதற்கு சிறப்பு விடுமுறை நாட்களை வழங்கி வருகின்றன.

பல புதிய திறன்கள் வெளிப்பட்டன
மனிதர்கள் தமது புதிய திறமைகளை வெளிப்படுத்த அதிக நேரத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியில் அதிக அக்கரையுடன் இருந்துள்ளனர்.
மூலிகைகள் மற்றும் பிற தாவரங்கள் செழித்து வளர்ந்தன, புதிய வீட்டு தோட்டங்கள் உருவாகின. அத்துடன் நிறைய சமையல்காரர்கள், கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் என தமது திறமையை வெளிப்படுத்தியவர்கள் ஏராலம்.

மக்கள் சக்தி மூலம் வெளிப்பட்டது 
மக்கள் மற்றும் பல நிறுவனங்கள் மனித நேயத்துடன் உதவுவதற்கு முன் வந்துள்ளன. முன் எப்பொதும் இல்லாத வகையில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து கொண்டுள்ளனர்.

வீட்டிலிருந்து வேலை!
2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் காரணமாக பலர் தமது வேலையை இழந்தனர். ஆனல் வீட்டில் இருந்து வேலைசெய்யும் கலாச்சாரம் உருவானது. பிரல நிறுவனங்கள் இதனை தொடர்ந்தும் முன்னெடுக்க முடிவெடுத்துள்ளன.

திருநங்கைகளாகளுக்கு அங்கிகாரம்!
ஓரின சேர்க்கையாளராகவோ அல்லது திருநங்கைகளாகவோ இருந்ததால் எந்தவொரு நபரையும் வேலையிலிருந்து நீக்க முடியாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.
பல நாடுகள் ஓரின சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியதால், சமூகத்திற்கு இது ஒரு முக்கிய ஆண்டாக இருந்தது, இதில் வடக்கு அயர்லாந்து, கோஸ்டாரிகா மற்றும் தைவான் ஆகியவை அடங்கும்.
பல திருநங்கைகள் வரலாற்றில் இடம் பெற்றனர்.

கார்பன் உமிழ்வு வெகுவாக குறைந்தது
உலகெங்கிலும் உள்ள நாடுகள் முடக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலைகள் மூடப்பட்டன, விமானங்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, உலக அளவில் வெளியிடப்படும் கார்பன் விகிதம் வெகுவாக குறைந்தது.
வளி மாசடைவும் இதன் காரணமாக குறைவடைந்திருந்தது.

மொத்தத்தில் கடந்து செல்லும் ஆண்டு இயற்கைக்கு பல நன்மைகளை செய்திருந்தாலும் மனிதர்களின் மனதில் மாறாத வடுக்களை விதைத்துச் செல்கின்றது.

முன் ஒருபோதும் இல்லாத அளவு மனிதர்களுக்கு சுகாதாரத்தையும் மனித நேயத்தையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் போதித்துள்ளது.
இவற்றை அடுத்துவரும் ஆண்டுகளில் நாம் மறக்காமல் மனதில் இருத்தி பின்பற்றுவோமானால் இனிவரும் காலங்களில் இவ்வாறான நெருக்கடி நிலையை இலகுவாக வெற்றி கொள்ளலாம்.

Hot Topics

Related Articles