உலகம்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதியவர் திடீர் மரணம்

சுவிட்சர்லாந்தில் பரீட்சாத்த நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதியவர், சிலமணி நேரங்களின் பின் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு 30 லட்சம் டோஸ் மருந்தை வழங்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் முதல் கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது.

இதற்கமைய ஜனவரி 4ஆம் திகதி முதல் சுவிசர்லாந்து முழுவதும் தேவைப்படுவோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இதன் பரிட்சாத்த நடிவடிக்கையாக சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதியவர், சிலமணி நேரத்தில் மரணம் அடைந்துள்ளார்.
தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் திடீரென்று மரணம் அடைந்தார். கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதியவரின் திடீர் உயிரிழப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கும் முதியவர் மரணத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

91 வயதான குறித்த முதியவர் ஏற்கனவே சுகயீனம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்து இருக்கிறார். கொரோனா தடுப்பு மருந்துக்கும் அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்படுள்ளது.

 

Hot Topics

Related Articles