இலங்கையில் நைஜீரியர்களினால் தொடரும் பண மோசடி! – எச்சரிக்கை விடுக்கும் பொலிஸார்!

புதுவருடத்தை முன்னிட்டு போலி தகவல்கள் வாயிலாக மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பரப்பப்படும் போலி தகவல்களை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ் மோசடி கும்பல், கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது வட்ஸ்அப், உள்ளிட்ட இணையத்தள செயலிகளுக்கு பணப்பரிசினை வென்றுள்ளதாக குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

குறித்த பணப்பரிசினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனை நம்பி மக்களும் பணத்தை வைப்பிலிடுகின்றனர். வைப்பிலிட்ட பணத்தை பெற்றுக்கொண்டவுடன் அவர்கள் தலைமறைவாகிவிடுகின்றனர்.

இவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இதுவரை நைஜீரிய பிரஜைகள் 24 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் சில நைஜீரியர்களால் இந்த சட்டவிரோத செயல்கள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படலாம் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஏரிஎம் இந்திரங்களில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது போன்று பல திட்டங்களையும் நைஜீரிய பிரஜைகள் வகுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles