உலகம்

கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தாதிக்கு கொரோனா தொற்று உறுதி!

கலிபோர்னியாவில் உள்ள தாதி ஒருவருக்கு ஃபைசர் தடுப்பூசி பெற்றுக்கொண்டு ஒரு வாரத்தின் பின்பு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஏபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஃபைசர்  தடுப்பூசி உடலுக்கு பாதுகாப்பை உருவாக்க அதிக நேரம் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

45 வயதான மத்தேயு டபிள்யூ, டிசம்பர் 18 ஆம் திகதி தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக அவரது முகபுத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, வைத்திய சாலையின் கோவிட் -19 பிரிவில் வேலை செய்த பின்னர் அவர் சுகயீனம் அடைந்துள்ளதாக இது குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உடல் குளிர் அடைந்ததுடன் பின்னர் தசை வலி மற்றும் சோர்வை உணர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிருஸ்துமஸ் தினத்திற்கு மறுதினம் அவர் கொரோனா பரிசோதனை செய்ததையடுத்து அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சான் டியாகோவின் குடும்ப சுகாதார மையங்களுடன் தொற்று நோயியல் நிபுணரான கிறிஸ்டியன் ராமர்ஸ், இது குறித்து தெரிவிக்கையில்,
இது எதிர்பாராதது அல்ல, “தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளிலிருந்து எங்களுக்குத் தெரியும், உங்கள் உடம்பு தடுப்பூசியிலிருந்து பாதுகாப்பை உருவாக்கத் 10 முதல் 14 நாட்கள் ஆகும்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் டிசம்பர் 18 இல் குறித்த தாதி கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டுள்ளார்.

இது 50% பாதுகாப்பை தருகிறது என்று நாங்கள் நினைக்கிறோம், மேலும் 95% வரை பாதுகாப்பை பெற அவருக்கு இரண்டாவது டோஸ் தேவை” என்று ராமர்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles