ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் ; 20 பேர் பலி!

யேமன் நாட்டின், ஏடன் விமான நிலையத்தில் நடந்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

யேமன் நாட்டின் தெற்கு பிரிவினைவாதிகளும், பன்னாட்டு நாடுகளின் அங்கீகாரம் பெற்ற அரசும் இணைந்து கடந்த 18ஆம் திகதி புதிய அரசை அமைத்தன.

Explosion rocks Yemen airport in 'cowardly terrorist attack' as new Cabinet members land
இந்நிலையில் புதிதாக பதவியேற்ற பிரதமரும், அமைச்சர்களும் சவூதி அரேபியாவிலிருந்து யேமன் நாட்டில் உள்ள ஏடன் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

இதன் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல துப்பாக்கிச் சூடுகள் மற்றும் சிறிய வெடிப்புகள் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதல் வெடிப்பு அல்-ஹதாத் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, இதனைத் தொடர்ந்து புகைமூட்டத்துக்கு மத்தியில் மெய்ன் அப்துல்மாலிக், யேமனுக்கான சவுதி தூதர் முகமது சையத் அல்-ஜாபர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த தாக்குதலில் விமான நிலையத்தின் கட்டிடம் சேதமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles