உலகம்

‘மாஸ்டர்’ திரைக்கு வரும் திகதி இதோ!

இளையதளபதி விஜயுடன் மக்கள் செல்வன் இனைந்து நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்துக்கு இசை – அனிருத்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டதையடுத்து மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 13ம் திகதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை (தற்போது 50 சதவீதமாக உள்ளது) அனுமதிக்குமாறு முதல்வரிடம், கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles