உலகம்

இலங்கையில் கடந்த ஆண்டு 1900 பேர் வீதி விபத்துகளில் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய முடக்கத்திற்கு மத்தியில் இந்த ஆண்டு ஏற்பட்ட வீதி விபத்துக்களில் கிட்டத்தட்ட 1900 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று காரணமாக நவம்பர் வரை, நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பயணக் கட்டுப்பாடுகள் 60 நாட்களுக்கு விதிக்கப்பட்டதிலிருந்து,.

இந்நிலையில், மார்ச் மாதம் முதல் இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இத்துடன் கடந்த சில வாரங்களில் வீதி விபத்துக்கள் கணிசமாக அதிகரிப்பதை அவதானிக்க முடிந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகளவில், வீதி விபத்துகளின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.

இலங்கை பொலிஸாரின் புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில், ஒவ்வொரு நாளும் ஏழு முதல் எட்டு பேர் இறக்கின்றனர், இதன் விளைவாக ஆண்டுக்கு சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles