உலகம்

இந்தியாவின் தடுப்பூசி உருமாற்றம் அடைந்த வைரஸூக்கு எதிராக செயற்படும் – மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த வைரசுக்கு எதிராக நிச்சயம் செயற்படும் என இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் உலக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் உள்ளளிட்ட உலக நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டமை மீண்டும் பீதியை ஏற்படுத்தியது.

எனினும் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்த வைரசுக்கும் எதிராக செயற்படும் என்று தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்துவருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த வைரசுக்கு எதிராக நிச்சயம் வேலை செயற்படும் என்று இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் மாநிங்களில் கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கொள்வனவு செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருகினறது.

இவ் புதிய வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும் இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் இவ் புதிய வைரஸ் இந்தியாவிலும் இனம் காணப்பட்டுள்து. இதற்கமைய இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று  உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,24,303 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 252 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,48,153 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும்  98,07,569 ஆக உயர்ந்துள்ளது.

Hot Topics

Related Articles