‘அரசியலுக்கு வர முடியவில்லை’ என்னை மன்னியுங்கள் – ரஜினிகாந்த் உருக்கம்

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி தொடர்பில் வெளியான தகவல்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் அவரிக் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

எனினும் அவர் இன்று தான் கட்சி தொடங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று உறுக்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவித்மாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுகு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி என்னக்கு மட்டும் தான் தெரியும்.

என பதிவிட்டுள்ளார்.

முழு அறிக்கையின்….

Image

Image

Image

Hot Topics

Related Articles