உலகம்

DFCC வங்கி தனது ‘DFCC Vayapara Athwela’ திட்டத்தின் மூலம் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுகிறது

DFCC வங்கி தனது ‘DFCC Vayapara Athwela’ என்ற இணையவழி தொழில்முயற்சியாளர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுகிறது

நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் முதன்மையான வணிக வங்கிகளில் ஒன்றான DFCCவங்கிஇ தனது “DFCCVayapara Athwela” என்ற இணையவழி தொழில் முயற்சியாளர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக ‘அனைவருக்கும் ஏற்ற வங்கி’ என்ற வாக்குறுதியை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளது.

தொழில் முயற்சியாளர்கள்இ சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள்இ மற்றும் பொது மக்கள் உத்வேகம் பெற ஊக்கமளிக்கும் அதே நேரத்தில்இ அவர்களின் தொழில் முயற்சித் திறன்களையும் மேம்படுத்தும் நோக்குடன் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் DFCCவங்கி முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் வழியாக அலைபரப்புச் செய்யப்படுவதுடன்இ இது வரை யூடியூப்பில் 55,000 இற்கும் மேற்பட்ட தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.

இது அடிப்படைக் கோட்பாடுகளையும் மற்றும் மேம்பட்ட கருப்பொருள்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சித்தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்இ இதனால் பார்வையாளர்களுக்கு தகவல்களை எளிதில் கிரகித்துக் கொள்ள இடமளிக்கிறது.
கீழேயுள்ள இணைப்புகள் மூலம் வீடியோக்களை பார்வையிடலாம்தற்போது பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றுநோய் போன்ற சோதனைமிக்க காலகட்டங்களில்இ சுய தொழில் மற்றும் தொழில் முயற்சி ஆகியவை நமது தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய முக்கிய கோட்பாடுகள்.

‘அனைவருக்கும் ஏற்ற வங்கி’ என்ற வகையில்இ தேவையான அறிவைப் பெறுவதில் இன்று உள்ள குறைபாடுகளை DFCCவங்கி விரைவாக அடையாளம் கண்டுள்ளது.

எனவே தொழில் முயற்சியாளர் குறித்த விரிவான புரிதலை வழங்குவதற்காக “DFCCVayapara Athwela” நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள அதேசமயத்தில் ஒருவரின் வணிகத்தை எவ்வாறு வளர்ச்சி பெறச் செய்வது என்பது தொடர்பான தொழில்முறை அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.

‘DFCCஏயலயியசய யுவாறநடய’ நிகழ்ச்சித்தொடரை தற்போது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும்இ தொழில் முயற்சியாளர் மற்றும் புத்தாக்க மையத்தின் தவிசாளருமான கலாநிதி ருக்மால் வீரசிங்க அவர்கள் நடத்தி வருகிறார்.

இத்துறையில் அவர் கொண்டுள்ள நிபுணத்துவத்தின் துணையுடன்இ ‘படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் மூலம் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்துதல்’இ ‘ஒரு புதுமையான வணிக சிந்தனையுடன் தொழில் முயற்சியாளர் ஒருவர் வணிகத்தை எவ்வாறு ஆரம்பிப்பது’இ தொழில் முயற்சியாளர்களின் நிதியியல் அறிவு மற்றும் நிதி முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்தல்

தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முயற்சி மற்றும் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற தலைப்பிலான விடயங்கள் இத்தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தங்கள் சொந்த தொழில் முயற்சியைத் தொடங்க ஆர்வமுள்ளவர்களைஇ அல்லது தங்கள் தொழிலை வளர்க்கும் உத்வேக தேடலில் ஈடுபட்டுள்ளோரை மேலே குறிப்பிட்ட சமூக ஊடக தளங்கள் மூலம் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு DFCCஅழைப்பு விடுக்கின்றது.

இந்த சிந்தனைமிக்க முயற்சி குறித்து DFCCவங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில்இ “தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் எப்போதும் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாகஇ கொவிட்-19 தொற்றுநோய் ஆனது நம் தேசத்திலும் அதன் பாதிப்பைக் காண்பித்துள்ளதுடன்இ நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த செயற்பாட்டாளர்களுக்குள் இருக்கும் சக்தியை இனங்கண்டு உரிய அங்கீகாரத்தை அளிப்பது முக்கியம்.

DFCCவங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் உள்ளதுடன்இ “DFCCVayapara Athwela” இந்த சித்தாந்தத்தின் சிந்தனையில் மலர்ந்த ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் தொழில் முயற்சியாளர் சார்ந்த நுண்ணறிவுகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாக அமைந்துள்ளது மட்டுமல்லாமல்இ பொதுமக்களும் எமது தளமேடைகளின் மூலமாக இந்த நிகழ்ச்சித்தொடரை கண்டும்இ கேட்டும் தமது அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

உள்நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளுக்கு அவற்றின் வணிகச் செயற்பாட்டுப் பயணத்தின் போது அவர்களுக்கு உதவுவதைக் கருதுகையில்இ DFCC வங்கி தொடர்ந்து முன்னின்று செயற்பட்டு வந்துள்ளது.

வங்கி எப்போதும் முறையே DFCC Vayapara Athwela” மற்றும் DFCC Vayapara Athwela” போன்ற சலுகைக் கடன் திட்டங்களுடன் நுண் தொழில் முயற்சியாளர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி ஏற்றுமதியாளர்களின் தீவிர ஆதரவாளராகத் திகழ்ந்து வருகிறது.

DFCCவங்கி தொடர்பான விபரங்கள்
DFCCவங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன்இ மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் ICRA Lanka Limitedஇடமிருந்து ஜளுடுஸ [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும் DFCCவங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

 

Hot Topics

Related Articles