உலகம்

ஏ.ஆர். ரகுமானின் தாயார் மரணம்!

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று மரணமடைந்துள்ளார்.

இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ஒன்பது வயதிலேயே தந்தை இழந்த போதும் இசை உலகில் அவரின் சாதனைகளுக்கு தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்தார்.

தனது தாய் துணிச்சலை பற்றி ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கையில் தாயின் பங்கு அளப்பரியது.

கரீமா பேகத்தின் மரணம் குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயாரின் மறைவையொட்டி எதுவும் தெரிவிக்காமல் புகைப்படத்தை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Hot Topics

Related Articles