உலகம்

ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கும் TAMAP

பழங்கள் மற்றும் மரக்கறிகள் துறைக்கு Reefer container தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கும் EU நிதியுதவித் திட்டமான TAMAP

இலங்கையின் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் ஏற்றுமதி கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பெருமளவு சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் இலங்கைக்கு முடியாமலிருப்பதில் பெறுமதி சங்கிலியில் காணப்படும் பல்வேறு இடைவெளிகள் காரணிகளாக அமைந்துள்ளன.

போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் அதிகளவு செலவீனம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுவதுடன், போட்டிகரமாக அமைந்திருப்பதற்கு அவசியமான அளவுகளை அதிகரிக்க முடியாதவர்களாகவும், அதிகளவு சரக்கேற்றல் செலவுகள் காரணமாக பின்தங்கிய நிலையிலும் காணப்படுகின்றனர்.

தற்போது நிலவும் தொற்றுப் பரவல் காரணமாக, ஏற்றுமதி வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆகாய மார்க்க சரக்குப் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளமையால் இந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு விரிவாக்கம் செய்யும் நோக்குடன், இலங்கை பழங்கள் மற்றும் மரக்கறி பதப்படுத்துநர் மற்றும் ஏற்றுமதியாளர் சம்மேளனம் (LFVPPEA), ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் இயங்கும் “விவசாய நவீனமயப்படுத்தலுக்கான தொழில்நுட்ப உதவித் திட்டம்” (TAMAP) இடமிருந்து, reefer container தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  எவ்வாறு பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பில் தமக்கு வழிகாட்டல்களை வழங்குமாறு கோரியிருந்தது.

Reefer container முகாமைத்துவம் மற்றும் விளைச்சலுக்கு பின்னரான கடல்மார்க்க சரக்குக் கையால் தொடர்பில் LFVPPEA ஐச் சேர்ந்தவர்களுக்கு அறிவையும் உதவிகளையும் வழங்கும் வகையில் ஒப்படையொன்றினூடாக TAMAP உதவிகளை வழங்கியிருந்தது. மேலும், தரமான விளைச்சல் முறைகள் மற்றும் சரக்கு செயலிழக்கும் நிலைகளை நிர்வகித்தல் தொடர்பான வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தது.

இதன் பிரகாரம், மரக்கறிச் செய்கை பெறுமதித் தொடர் முகாமைத்துவம் மற்றும் ஏற்றுமதிச் சரக்குக் கையாளல் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற இருவர்களை இந்த திட்டத்தில் TAMAP ஈடுபடுத்தியிருந்தது. கப்பற் போக்குவரத்துத் துறையில் 23 வருடங்களுக்கு அதிகமான நிபுணத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ள என். பிரபாத், சர்வதேச வர்த்தகம் மற்றும் சரக்குக் கையாளல் ஆகியவற்றில் நிபுணராக திகழ்கின்றார். பசுமையான உற்பத்திகளின் விநியோகத் தொடர் நிபுணராகவும், கடல்மார்க்க நஷ்டஈடுகள் தொடர்பான தொழில்நுட்ப நிபுணராகவும் கீத் ரொக்ஸ்பேர்க் திகழ்கின்றார்.

இந்த ஒப்படையினூடாக, LFVPPEA இன் அங்கத்தவர்களுடனும், துறையின் இதர விவசாய ஏற்றுமதியாளர்களுக்கும் TAMAP இனால் சில சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிபுணர்கள் நேரடியான தொடர்பாடல்களை பேணியிருந்ததுடன், பெருந்தோட்டப்பகுதிகளுக்கு விஜயம் செய்து பணிச்சூழல்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

ஏற்றுமதி அளவை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆலோசனை உதவிகளை வழங்கியிருந்ததுடன், சில பயிற்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஒப்படையின் போது பிரபாத் மற்றும் ரொக்ஸ்பேர்க் ஆகியோர் “ஏற்றுமதிகளுக்கான விநியோக சங்கிலியின் பெறுமதி” என்பது தொடர்பில் மெய்நிகர் பயிற்சிப்பட்டறைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

reefer technology தொழில்நுட்பம் தொடர்பான பிரதான கொள்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், பங்கேற்றிருந்தவர்களுக்கு குளிர் அறை நிர்வாகம் மற்றும் சரக்குக் கையால் கொள்கைகள் மற்றும் செயன்முறைகள் பற்றிய ஆழமான அறிமுகம் வழங்கப்பட்டிருந்தது.

பிரபாத் குறிப்பிடுகையில், “எமது ஒப்படையினூடாக, ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த செயன்முறைகள் பற்றிய விளக்கங்களை வழங்கவும் சரக்கு கையாளல் எதிர்விளைவுகளை தணித்துக் கொள்ளும் வகையில் எவ்வாறு நஷ்டஈடு தடுப்புமுறைகளை விளக்கமளிப்பது தொடர்பான விளக்கங்களை வழங்க எதிர்பார்த்தோம்.

இலக்கு வைக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதியில் ஒரு பகுதியை கடல்மார்க்கமான ஏற்றுமதிக்கு மாற்றிக் கொள்ள உதவியிருந்ததுடன், பாதுகாப்பான கப்பற்சரக்கேற்றல்களில் ஈடுபட உதவியாக அமைந்திருந்தது.” என்றார்.

ரொக்ஸ்பேர்க் குறிப்பிடுகையில், “உலகின் பல பாகங்களில் கடல் மார்க்கமாக குளிரூட்டப்பட்ட முறையில் விளைச்சல்களை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

கடல் மார்க்கமாக எவ்வாறு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது தொடர்பான அறிவை TAMAP பகிர்ந்திருந்ததுடன், பெருமளவு அக்கறை தேவைப்படும் பகுதிகள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

சரக்குத் தொகுதி வெற்றிகரமாக அனுப்பப்படுவதை உறுதி செய்யும் வகையில், உற்பத்தியாளர்கள் மற்றும் பொதியிடுவோருக்கு அவசியமான வழிகாட்டல்கள் பலவும் வழங்கப்பட்டிருந்தன.” என்றார்.

இந்த ஒப்படையின் போது, TAMAP இன் நிபுணர்கள், ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து பணியாற்றியிருந்ததுடன், ஏனைய ஏற்றுமதியாளர்களுக்கும் reefer தொழில்நுட்பம் பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.

சில பழங்கள் மற்றும் மரக்கறிகள் ஏற்றுமதி நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளுக்கு TAMAP இனால் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். இதன் பிரகாரம் “இடர் தணிப்பு மற்றும் நஷ்டஈடுகள் கையாளல்” பயிற்சிப் பட்டறையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

TAMAP நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் LFVPPEA இன் தலைவர் சுரேஷ் எல்லாவல கருத்துத் தெரிவிக்கையில், “தொற்றுப் பரவல் காரணமாக வணிக விமான சேவைகள் குறைவடைந்து, சரக்கு விமான சேவைகளுக்கான கட்டணங்கள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலிருந்து விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு ஆகாய மார்க்கத்திலிருந்து, கடல் மார்க்கத்துக்கு மாற்றிக் கொள்வது என்பதனூடாக பெருமளவு போட்டிகரத்தன்மை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் எமது சம்மேளனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அறிவை மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் TAMAP ஆகியன முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பங்காளராக இணைந்துள்ளதையிட்டு எமது சம்மேளனம் பெருமிதம் கொள்கின்றது.” என்றார்.

“மத்திய கிழக்கு நாடுகளுக்கு Reefer Containerகளில் பழங்கள் மற்றும் மரக்கறிகளை ஏற்றுமதி செய்வது” எனும் தலைப்பில் இறுதி பயிற்சிப்பட்டறை அண்மையில் இடம்பெற்றது. இதனூடாக reefer container தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான அறிவை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

சரக்கு பெறுமதி சங்கிலி, அறுவடைக்கு பின்னராக கையாளல் செயன்முறைகள், நஷ்டஈடு தவிர்ப்பு, பொதியிடல், சரக்குகள் மற்றும் விநியோக சேவைகள் மற்றும் சர்வதேச கப்பற் போக்குவரத்து போன்ற முக்கியமான தலைப்புகள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

Reefer technology தொழில்நுட்பத்தினூடாக அனுகூலம் பெற எதிர்பார்க்கும் சகல ஏற்றுமதியாளர்களுக்கும் அணுகல் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், TAMAP இனால் அது தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஒன்லைன் e-நூலகமொன்றை நிறுவும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் ஆக்கங்கள், வீடியோக்கள் மற்றும் பிரசுரங்கள் போன்றன அடங்கியுள்ளது.

சகல ஏற்றுமதியாளர்களுக்கும் இந்த ஆவணங்களை https://www.eusl-ruraldevelopment.org/reports-documents/ எனும் இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை பின்பற்றி இயங்க முடியும்.

பிரபாத் மேலும் குறிப்பிடுகையில், “இந்த தொழில்நுட்ப உதவியினூடாக நாம் கட்டியெழுப்பியுள்ள அறிவை, சகலருடனும் எதிர்காலத்தில் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

Hot Topics

Related Articles