உலகம்

இந்திய வீரர்களின் தலைமையில் ஐ.சி.சி கனவு அணிகள் : தோனிக்கு மகுடம்

கடந்த 10 ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக ஜொலித்த வீரர்களைக் கொண்டு ஐ.சி.சி கனவு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒருநாள், ரி20 மற்றும் டெஸ்ட் அணிக்கள் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருநாள், டி20 அணிகளுக்கு தலைவராக மகேந்திரசிங் தோனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை டெஸ்ட் அணி தலைவராக  விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதில் இலங்கை வீரரான குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளார்.

ரி20 அணியில் விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ரோஹித் ஷர்மா, தோனி ஆகிய நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். ‘யூனிவர்ஷல் பாஸ்’ கிறிஸ் கெய்ல், ஏபி டிவிலியர்ஸ் பெயர்களும் லிஸ்டில் உள்ளது.

ஐ.சி.சி கனவு டி20 அணி: ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மகேந்திரசிங் தோனி (கேப்டன்), கெய்ரன் பொல்லார்ட், ரஷித் கான், ஜஸ்பரீத் பும்ரா, லஷித் மலிங்கா

ஐசிசி கனவு ஒருநாள் அணி: ரோஹித் ஷர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், ஷகிப் அல் ஹசன், மகேந்திரசிங் தோனி (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிரன்ட் போல்ட், இம்ரான் தஹிர், லஷித் மலிங்கா.

தோனி தலைமைதாங்கும் இரு அணிகளிலும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற மூன்று இந்திய வீரர்களும் இலங்கை வீரரான லஷித் மலிங்கவும் இடம்பெற்றுள்ளனர்.


ஐ.சி.சி கனவு ஒருநாள், ரி20 இரண்டு அணிகளுக்கும் தோனி தலைவராக தேர்வானதால் தோனியின் ரசிகர்கள் டுவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Hot Topics

Related Articles