உலகம்

அமெரிக்காவில் ஒருவருக்கு $600 நிவாரணம் – கையெழுத்திட்டார் ட்ரம்ப்

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 2.3 ரில்லியன் அமெரிக்க டொலர் கொரோனா நிவாரணம் நிதி சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு உதவும் வகையில் 2.3 ரில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்ட மூலத்துக்கு பாராளுமன்ற அவை மற்றும் செனட் சபை ஆகியவை ஒப்புதல் அளித்தன. இறுதியாக ஜனாதிபதி ஒப்புதலுக்காக நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்தது.

இவ் நிவாரண நிதி தொகையின் படி அமெரிக்கர் ஒருவருக்கு 600 டொலர்கள் நிவாரண நிதியாக வழங்கப்படவுள்ள நிலையில் இதனை 2000 டொலர்களாக அதிகரிக்கக் கோரி ட்ரம் இவ் சட்டமூலத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்திருந்தார்.

எனினும் இவ் நிவாரண தொகையை 600 டொலரிலிருந்து 2,000 டொலர்களாக உயர்த்துவதற்கான சட்டத்தை செனட் சபை பரிசீலிப்பதற்கான உறுதிப்பாட்டை வழங்கியதன் பின்னரே தான் கொரோனா வைரஸ் நிவாரண சட்டமூலத்தில் கையெழுத்திட்டதாக ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் அமெரிக்காவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இவ் 900 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண சட்டமூலத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் கையொப்பம் இட்டுள்ளமையால் மில்லியன் கணக்கான வேலையற்ற தொழிலாளர்கள் மற்றும் வருமானத்தை இழந்த வர்த்தகர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

Hot Topics

Related Articles