உலகம்

வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரஜினிகாந்த்!

கடந்த 3 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகந்த தற்போது வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் நேற்று ஆறாய்ந்து வருவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவரின் உடல்நிலைக் குறித்து அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
அதில்,

ரஜினி உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும் மேலும் ரஜினிகாந்த் ஒருவாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் எளிதான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினி... ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.

இன்று மாலை அவர் விமானம் மூலம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள், சில நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.

இதற்கமைய கடந்த 3 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles