உலகம்

வீதியில் நின்றவர்களை காப்பாற்ற முயன்ற சாரதி ! பஸ்ஸில் பயணித்த 37 பேர் பரிதாப பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான மேற்கு கேமரூனில், பஸ் ஒன்று லொரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இவ் விபத்து பதிவாகியுள்ளது.

கேமரூன் நாட்டின் மேற்கு நகரமான போயும்பானில் இருந்து தலைநகர் யாவுண்டாவிற்கு 70 இருக்கைகள் கொண்ட பஸ் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது.

இதன் போது சாலை அருகில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக ஓட்டுனர் பஸ்ஸை வேறு திசைக்கு திருப்ப முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வேகமாக பயணித்த லொரி மீது பஸ் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் சாரதி உட்பட பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அத்துடன் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.

1609079137 251 Cameroon A truck and bus crash killed at least 37

60 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இவ் விபத்தை அடுத்து லொரியின் சாரதி தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை உயரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் விழா முடித்துக் கொண்டு திரும்புபவர்களும், புத்தாண்டை வரவேற்பதற்காக வீடுகளுக்கு திரும்புபவர்களும் வியாபாரிகளும் இவ் பஸ்ஸில் பயணித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bus crash in western Cameroon kills 37, injures 18

 

கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16,000 க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்களில்  2,000 பேர் கொல்லப்படுவதாக கேமரூன் அரசு தெரிவித்துள்ளது.

பாவனைசெய்யப்பட் வாகனங்களை  அதிகமாக இறக்குமதி செய்வது, இயந்திர செயலிழப்பு, பழைய மற்றும் தேய்ந்த ரயர்களைப் பயன்படுத்துதல், அபாயகரமான முந்தியது, அதிக வேகம் மற்றும் சாலைகளின் மோசமான நிலை ஆகியவை விபத்துக்களுக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Hot Topics

Related Articles