உலகம்

ரஜினியின் இரத்த அழுத்தத்திற்கு காரணமான கீர்த்தி?

அண்ணாத்த படப்பிடிப்பின் போது இரத்த அழுத்தத்திற்கு உள்ளான நடிகர் ரஜினிகாந்த், மூன்று தினங்கள் வைத்தியசாலையிலிருந்து இன்று வீடுதிரும்பியுள்ளார்.

எனினும் இவருக்கு எப்படி இரத்த அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ரஜினியின் இரத்த அழுத்தத்திற்கு கீர்த்தியுடன் சேர்ந்து நடித்தது தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும் ரஜினி பதட்டம் அடைந்துள்ளார்.

கீர்த்தியுடன் சேர்ந்து நடித்ததால் அவர் மூலம் தனக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்று ரஜினி பயந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கொரோனா பரிசோதனையில் ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

எனினும் அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்கிற பதட்டத்தில் தனிமையில் இருந்ததால் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் திகதி ஆரம்பியமாகிய நிலையில் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவுப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles