உலகம்

இலங்கையில் கொரோனாவால் மேலும் 04 பேர் பலி! அதிக ஆபத்தான பகுதிகளை அடையாளப் படுத்தும் வரைபடம் இதோ!

இலங்கையில் இன்று 668 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 614 பேர் பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும்,

54 பேர் சிறைச்சாலைகலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,048 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணி 37,360 ஆகய உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன மூன்று வெளிநாட்டவர் உட்பட 8,160 பேர் நாடளாவியரீதியல் உள்ள கொரோனா தொற்றுக்கான 65 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இலங்கையில் மேலும் 650 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,701 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 மரணங்கள் இன்று பதிவாகியுள்ளது.

66 வயது ஆண் ஒருவரும், 78, 75, 52 ஆகிய வயதுகளை உடைய மூன்று பெண்களும் வெவ்வேறு தினங்களில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த போது உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டின் இறப்பு எண்ணிக்கையை 191 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு! மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

நாளை (28) காலை 5 மணியுடன் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை ஆகிய காவல் துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இதேவேளை கொம்பனித்தெருவில் வேகந்த மற்றும் ஹுனுபிட்டிய கிராமசேவகர் பிாிவு, வெள்ளவத்தை-மயூரா வீதி, பொரள்ளை-ஹல்கஹவத்த மற்றும் காளிபுள்ளவத்த, வெள்ளம்பிட்டி லக்சந்த செவன வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகளும் நாளை காலை 5 மணியிலிருந்து தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுமென அவர் தொிவித்துள்ளார்.

அத்துடன் வாழைத்தோட்டம்-அளுத்கடை மேற்கு மற்றும் அளுத்கடை கிழக்கு கிராம சேவகர் பிாிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தொிவித்துள்ளார்.

இலங்கையின் மேலும் சில பகுதிகள் இன்று பிற்பகல் முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்தார்.

இதற்கமைய எஹலியகொட பிரதேச செயலகப் பிாிவின் மின்னான, விலேகொட, யக்குதாகொட, அஸ்ககுல-வடக்கு, போபத்த ஆகிய கிராம சேவகர் பிாிவுகள் , கொடகவெல பிரதேச செயலகப் பிாிவின் றக்வான நகரம், றக்வான- வடக்கு, றக்வான – தெற்கு, மஸ்ஸிபுல, கொட்டல ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக அதிக அவதானத்துக்குறிய பகுதிகளை காண்பிக்கும் வரைபடம் சுகாதர அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles