இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்! 40 ஆயிரத்தை கடந்தது தொற்று எண்ணிக்கை !

இலங்கையில் இன்று 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 541 பேர் பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும்,
52 பேர் சிறைச்சாலை மற்றும் வெளிநாடுகளில் நாடு திரும்பியவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,380 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணி 36,692 ஆகய உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன மூன்று வெளிநாட்டவர் உட்பட 8,143 பேர் நாடளாவியரீதியல் உள்ள கொரோனா தொற்றுக்கான 63 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இலங்கையில் மேலும் 712 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,051 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவரின் மரணம் இன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு -15 ஐ சேர்ந்த 67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டின் இறப்பு எண்ணிக்கையை 187 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கடந்த 18ம் திகதி முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பாிசோதனைகளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கொழும்பு மாவட்டத்தில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட்; 19 தொற்றுறுதியான 551 பேரில் 300 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 52 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 37 பேருக்கும், நுவரெலிய மாவட்டத்தில் 28 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 27 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 17 பேருக்கும், கண்டியில் 16 பேருக்கும், தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக போராட்டம்!
கொவிட் 19 தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா – மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு அருகில் இன்று முற்பகல் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இவ் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மௌலவிமார்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Hot Topics

Related Articles