உலகம்

இந்தியாவில் முதல் முறையாக மேயராகும் 21 வயது பெண்!

இந்தியாவின் கேரளாவில் 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

21-Year-Old Arya Rajendran Likely To Become Next Thiruvananthapuram Mayor
கேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுள்ளதுடன் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது.

அத்துடன், ஆல் செயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு பயின்றுவரும் ஆர்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடவன்முகல் தொகுதியில் கவுன்சிலராக வெற்றிபெற்றார்.

21 வயதில் மேயர்: திருவனந்தபுரத்தில் இளம்பெண் சாதனை- Dinamani
இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநகராட்சிக்கு மேயரை தேர்வு செய்தவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் இவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் இளம்வயது மேயர்!' - திருவனந்தபுரம் மாநகராட்சியில் பதவியேற்கும் 21  வயதுக் கல்லூரி மாணவி | India's youngest mayor - 21 year old to take charge  in Thiruvananthapuram ...
21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் கேரளாவில் இளம்வயதில் மேயர் பதவிபெறும் பெண் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற உள்ளார்.

இத்துடன் இவர் மேயராக பொறுப்பேற்றால் இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மேயர் பதவியடையும் பெருமையை ஆர்யா பெறுவார்.

கல்லூரி மாணவியான ஆர்யா இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles