உலகம்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் – அப்பல்லோ அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அப்பல்லோ நிர்வாகம்,
“கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை.

ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை.

ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.

அதில் பணியாற்றிய 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles