உலகம்

ஒன்லைன் பயிற்சித் திட்டத்தினூடாக மாணவர்களுக்கு 2000 புலமைப்பரிசில்களை SLIIT மற்றும் CISCO Networking Academy இணைந்து வழங்கியுள்ளன

ஒன்லைன் பயிற்சித் திட்டத்தினூடாக மாணவர்களுக்கு வலையமைப்புத் திறனை பெற்றுக் கொடுக்கும் வகையில் 2000 புலமைப்பரிசில்களை SLIIT மற்றும் CISCO Networking Academy இணைந்து வழங்கியுள்ளன

வெற்றிகரமான எதிர்காலத் தலைமுறையினருக்கு, டிஜிட்டல் திறன் கல்வியின் பரந்தளவு முக்கியத்துவத்தை உணர்ந்து, 2000 மாணவர்களுக்கு வலைப்பின்னல் தொடர்பில் விசேட ஒன்லைன் பயிற்சித் திட்டத்தை வழங்க  SLIIT மற்றும் CISCO Networking Academy ஆகியன கைகோர்த்திருந்தன.

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்வியகமாக Cisco Networking Academy திகழ்வதுடன், டிஜிட்டல் பொருளாதாரத்தில் வெற்றிகரமாக இயங்குவதற்கு அவசியமான திறன்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பயிற்சிநெறியினூடாக வலையமைப்பு திறன்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், மாணவர்களுக்கு சமூகங்களுக்கு பங்களிப்பு செய்ய அவசியமான பிரயோக அறிவை வழங்குவதாக அமைந்துள்ளது. வலையமைப்பு திறன் தொடர்பில் துறைக்கு அவசியமான பங்களிப்பு வழங்குவதுடன், இந்த பயிற்சிநெறியினூடாக, இம்மாணவர்களுக்கு 21ஆம் நூற்றாண்டுக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள அவசியமான வினைத்திறனான வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளவும், தற்போதைய தொழில்நுட்பங்களில் நிபுணர்களாக திகழ்வதற்கு அவசியமான அடித்தளத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

SLIIT – CISCO Networking Academy கைகோர்த்து, மாணவர்களுக்கு அவசியமான வலையமைப்பு பயிற்சிகளை வழங்குவதுடன், வலையமைப்புத் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்ப தயார்ப்படுத்தலை வழங்கும் உகந்த கட்டமைப்பாக அமைந்துள்ளது. தற்போது தரம் 9 முதல் உயர் தரம் வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ளும் தகைமை காணப்படுகின்றது.

இந்த பயிற்சிநெறி தொடர்பில் அபிவிருத்தி மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பாளர் உதித கமகே கருத்துத் தெரிவிக்கையில், “Cisco Networking Academy உடன் இணைந்து பணியாற்றுவதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப உலகில் வெற்றிகரமாக இயங்க அவசியமான அறிவையும் திறன்களையும் பெற்றுக் கொள்ள பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்தப் புலமைப்பரிசில்களினூடாக நாடு முழுவதையும் சேர்ந்த மாணவர்களுக்கு அனுகூலம் பெறுவதற்கு உதவியுள்ளதுடன், திறமையை வளர்த்துக் கொள்ள புதிய வாய்ப்புகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இந்த பயிற்சிநெறியை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சுக்கு நாம் ஆதரவையும் உதவிகளையும் வழங்கியுள்ளோம்.” என்றார்.

வலையமைப்புக்கான அறிமுக பயிற்சிநெறியில் architecture, structure, functions and components of the internet and other computer networks போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. வலையமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது தொடர்பான அடிப்படை புரிந்துணர்வை மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன், எளிமையான local area networks, perform basic configurations for routers and switches, and implement Internet Protocol போன்றவற்றை நிறுவுவது தொடர்பில் அடிப்படை அறிவைப் பெற்றுள்ளனர்.

இந்த பயிற்சிநெறிக்கான காலம் 70 மணித்தியாலங்கள் என்பதுடன், ஒன்லைன் ஊடாக தொலைதூர கல்விமுறையின் பிரகாரம் வாரத்தில் ஏழு அமர்வுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த அமர்வுகளில் இணைந்து கொள்ள இந்தக் கற்கை உதவியாகவும் அமைந்திருந்தது.

இந்த பயிற்சித் திட்டம் தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள அழையுங்கள் 077 330 0066 அல்லது மின்னஞ்சல் ஊடாக pdp@sliit.lk தொடர்பு கொள்ளவும்.

Hot Topics

Related Articles