உலகம்

உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் – பிரதானமாக 7 அறிகுறிகள்

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரு வேறு மாறுபாடுகள் வீரியமாக பரவிவரும் நிலையில் அந்நாடுகளில் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், முன்னரைவிடவும் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸின் அரிதான அறிகுறிகளாக சொல்லப்படும் சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு ஆகியவற்றை உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பிரதான அறிகுகளாக தென்படுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் மிகவும் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு என்பன அறியப்பட்டுள்ளன.

அத்துடன் அரிதான அறிகுறிகளாக தலைவலிகள் மற்றும் உடல் வலிகள், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, கண்வலிகள், தலைவலி, சுவை அல்லது மணம் அறிய முடியாமை, தோல் நோய் அல்லது கை கால் விரல்களின் நிறம் வெளிர்தல் என்பனவும் அறியப்பட்டுள்ளன.

புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி, இங்கிலாந்தில் 39,237 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்ஆப்பிரிக்காவிலும் பரிவி வரும் புதிய வைரஸ் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக இங்கிலாந்து சுகாதார அமைச்சர் மேத் ஹன்காக் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles