அமெரிக்காவில் குண்டு வெடிப்பு? – கிருஸ்துமஸ் தினத்தில் பரபரப்பு!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நஷ்விலி நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிலிருந்து வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிருஸ்துமஸ் தினமான இன்று காலை நஷ்விலி நகரில் உள்ள மக்கள் கூட்டம் அலைமோதும் சர்ஜ் தெரு-கமர்ஸ் தெருவுக்கு இடைப்பட்ட பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

Newly obtained security camera footage shows the moments before the bomb detonated on Friday morning in downtown Nashville
அமெரிக்க நேரப்படி சரியாக 6.40 மணியளவில் அந்த கார் திடீரென வெடித்துச்சிதறியுள்ளது.

இன்று அதிகாலை குறித்த குதியில் அமைந்துள்ள உணவகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் நின்றுகொண்டிருந்தது.

This is what is left of Second Avenue in downtown Nashville after the explosion on Friday morning. Police have not yet identified a suspect
இதையடுத்து, உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் காரில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர்.


உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேற்றியதுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரித்துள்ளனர்.

எனினும், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கார் திடீரென வெடித்துச்சிதறியுள்ளது.

A building is damaged near the area where an explosion was reported on Friday, Dec. 25, 2020 in Nashville, Tenn. Buildings shook in the immediate area and beyond after a loud boom was heard early Christmas morning

இதனால், உணவகங்கள், கேளிக்கை விடுதிகளின் உள்ளிட்ட 20 கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. மேலும், இந்த சம்பவத்தில் பொலிஸார் உள்பட 4 பேருக்கு காயம் அடைந்துள்னர்.

மேலும் ஒரு பொலிஸார் செவித்திறனை இழந்ததாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

This was the scene in downtown Nashville on Friday morning after a parked vehicle exploded
கார் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான (எஃப்டிஐ) விசாரணையை தொடங்கியுள்ளது. வெடிப்பொருள் வகை இன்னும் அறியப்படவில்லை.

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, மற்றும் கார் வெடிக்கும் போது அதில் யாராவது இருந்தார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

This was the scene immediately after the explosion on Friday morning in downtown Nashville
முதல்கட்ட விசாரணையில், கார் வெடித்து சிதறியது திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் தினத்தில் கார் வெடித்து சிதறிய நடந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு நிலவி வருகின்றது.

A law enforcement member walks past damage from an explosion in downtown Nashville, Tenn., Friday, Dec. 25, 2020

Hot Topics

Related Articles