உலகம்

அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும் – பாப்பரசரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும் எனவும் ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்றும் பரிசுத்த பாப்பரசர் ஆண்டகை பிரான்சிஸ் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.

Fewer than 200 people, wearing face coverings, attended the mass, and they were mostly employees of the tiny state of Vatican City (pictured)
கிறிஸ்தவர்களின் புதின நகரமான ரோமில் உள்ள தேவாலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

பரிசுத்த பாப்பரசர் ஆண்டகை பிரான்சிஸின் இன்றைய கிறிஸ்துமஸ் செய்தியில்,

“இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார்.

The mass, traditionally held at midnight, had been moved forward by two hours to 7.30pm to meet Italy's curfew rules
ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம்.

இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று கூறினார்.

வத்திகான் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலக  நாடுகளைச் சேர்ந்த 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 200 க்கும் குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Pope Francis, who just celebrated his 84th birthday, will address his eighth Christmas message 'Urbi et orbi' ('to the city and the world') on Friday by video
அத்துடன் இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது மக்கள் வத்திகான் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.dailymail.co.uk/news/article-9086869/Covid-Christmas-starts-early-Pope-Francis-leads-just-200-masked-faithful-midnight-mass.html#v-696849604881724588

Hot Topics

Related Articles