உலகம்

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ஸூம்!

கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக ஸூம் மின்னஞ்சல் சேவை மற்றும் காலண்டர் பயன்பாட்டை உருவாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கவேண்டி ஏற்பட்டதால் இந்த ஆண்டு காணொளி கலந்துறையாடல்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஸூம் முக்கிய பங்கு வகித்தது.

இந்த ஆண்டு உலகெங்கிலும் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் ஸூம் செயலியை பயன்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஸூம் நிறுவனம் இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு மின்னஞ்சல் சேவையையும் காலண்டர் பயன்பாட்டையும் தொடங்கும் என எதிர்ப் பார்க்கப்படுகின்றது.

எனினும் இதனை வெளியிடுவதற்கான திகதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு எதிராக அமையலாம்.

எவ்வாறாயினும், தொற்றுநோய் முடிவு ஸூம் நிறுவனம் அதன் வெற்றியின் முடிவாக அமைய அனுமதிக்கவில்லை, மேலும் அது தனது பயன்பாட்டாளர்களுடன் வெற்றிகரமாக தொடர பிற போட்டிச் சந்தைகளையும் உருவாக்கியுள்ளது.

Hot Topics

Related Articles