உலகம்

இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் இறக்குமதி ஆடைகளுக்கு சிறப்பு வரி!

இலங்கையில் 2021 ஏப்ரல் 01 முதல் இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு சிறப்பு வரி விதிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஆடை வர்த்தகர்களைப் பாதுகாத்தல், தரமற்ற ஆடைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

,இதற்கமைய அடுத்த ஆண்டு முதல் தரமற்ற ஆடைகளை இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் வரி முறையை 200 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக உயர்த்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காதை குடைய பயன்படுத்தும் குச்சிகள், மிதக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், 20 மில்லிலீற்றரை விட குறைந்த கொள்ளளவுடைய ஸஷே பக்கட்டுக்கள் முதலான ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் ஆறு உற்பத்திகளை தடை செய்யவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles