உலகம்

கொரோனா தொற்று சந்தேகத்தில் தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்! பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில், தனக்கு கொரோனா தொற்று இருக்காலாம் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெறும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

வத்தளை, ஹுனுபிட்டி, வெடிகந்த வீதியை சேர்ந்த 73 வயதுடைய 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தெற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்றிரவு தனது வீட்டை விட்டு வெளியேறிய இவர், மெழுகுவர்த்தியின் உதவியுடன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமாயின் அது தனது பிள்ளைகளையும் பாதிக்கும் என நினைத்தே இவ்வாறு தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அவரின் மகன் பொலிஸாருக்க வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்ற இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வயதானவர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படும் கொரோனா தொற்று அவர்களை மனதளவிலும் பாதித்திருப்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

எனவே வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் முன்பைவிடவும் அதிக அக்கரையுடன் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

Hot Topics

Related Articles