ஆபாசமான பதிவுகளை அகற்றுவது எப்படி?

தற்போது ஒருவரை துன்புறுத்துவதற்கும் பலிவாங்குவதற்கும் இணையம் பரவலாக பயன்படுத்தப் படுகின்றது குறிப்பாக அதிகமான பெண்கள் சமூக ஊடகங்களில் ஆண்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகின்றார்கள்.

அதன் மூலம் பெண்களின் வீடியோக்களை வைத்து பலர் வியாபாரம் செய்கின்றார்கள்.

இந்த வியாபாரத்தில் முக்கியமாக ஆபாச வீடியோக்கள் எடுப்பது மற்றும் பெண்கள் வெளியிட்டுள்ள டாப்ஸ் மாஷ், டிக் டாக் வீடியோக்களை எடுத்து அதனை ஆபாச வீடியோக்கள் நடுவே இணைத்து ஆபாச வலைத்தளங்களில் வெளியிடுவது.
முகத்தை மாப் செய்து பயன்படுத்துவது, xxx வீடியோக்களில் பதிவேற்றுவது என பல்வேறு விடயங்கள் உள்ளன.

இவ்வாறதன சிக்கலில் நீங்கள் சிக்கிக்கொள்ளமால் இருக்க முதலில் அவதானாமாக செயற்பட வேண்டும். தேவையில்லாத செயலிகளை (app) அலைபேசியில் பதிவிறக்கம் செய்வதனை முதலில் தவிர்க்க வேண்டும்.

சில முகநூல் கணக்குகள் பெண்களின் பெயரில் இருக்கும், ஆனால் அது ஒரு ஆணாக இருக்கலாம். அவர்கள் கேற்பதற்கு இணங்கி பெண்கள் வீட்டு முகவரியையோ அல்லது அலுவலக முகவரியையோ அனுப்பி விடுகின்றனர்.

இந்த நபர்கள் கேமிரா பொருத்திய பரிசு பொருளை அனுப்பி, அதன் மூலமாக எளிதாக பெண்களின் வீடியோக்களை எடுத்து விடுகின்றனர்.

இது தவிற நம்பிக்கையாக பகிரப்படும் தரவகள் கூட இவ்வாறு பெண்களை அச்சுறுத்தும் ஆயுதமாகின்றது.

இவ்வாறான அந்தரங்க தரவுகள் அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்கு செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்கு பெண்கள் சென்று விடுகின்றனர்.

எனினும் இவ்வாறான பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறான தரவுகளை இணைத்திலிருந்து அகற்றுவதற்கு இலகுவான முறைகள் உள்ளன.

முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாக பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
அவற்றில் சில.

image removal processing மூலமாக ஆபாசமாக பதிவிட்டுள்ள புகைப்படங்களை நீக்கி விட முடியும்.

கூகுள் வலைத்தளத்தில் reverse image processor பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிர பட்டுள்ளது என்பதனை அறிந்து அதை நீக்கி விட இயலும்.

யூ ட்யூப் இல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.
xxx வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில் abuse reporting form என்று ஒரு படிவம் உள்ளது.

அந்த படிவத்தில் , இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பதிவேற்ற பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்த காணொளியை நீக்கி விடுவார்கள்.

இதனை தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்கக் கூடிய தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.

உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கேட்டு விட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்து பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்த சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளை பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்று விட கூடாது.

அத்துடன் நண்பன், காதலன் போன்ற உறவுகள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் பேன்ற சமூக ஊடகங்களில் பெறக்கூடியவை அல்ல என்பதை பெண்கள் உணர வேண்டும்.

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles