உலகம்

பிலிப்பைன்ஸில் அடுத்த ஆண்டு திட்டமிடப்படாத 2 இலட்சம் குழந்தைகள் பிறக்கும்!

பிலிப்பைன்ஸில் பூட்டுதல் காரணமாக அடுத்த ஆண்டு திட்டமிடப்படாத 214,000 குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் நாடுகள் தமது நகரங்களை முடக்கியுள்ளன.

இதன் காரணமாக மக்கள் தொடர்ந்த தமது வீடுகளில் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டள்ளது.

இது பல நாடகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் திட்டமிடப்படாத குழந்தைப்பிறப்புக்கு காரணமாகியுள்ளது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் மக்கள் தொகை நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் கணிப்புகளின்படி அடுத்த ஆண்டு திட்டமிடப்படாத குழந்தை பிறப்பு விகிதம் இதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

In this Manila hospital, women crowd four to a bed after giving birth. But they put up with it for a reason. giving birth
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்கனவே ஆண்டுக்கு 1.7 மில்லியன் குழந்தைகள் பிறப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவ் அதிகரிப்பு பிலிப்பைன்ஸி பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

பூட்டுதல் காரணமாக பெண்கள் கருத்தடை சாதனங்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலை இதற்கு ஒரு காரணமா அறியப்பட்டுள்ளது.

ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளுக்கு நெருக்கமான கருவுறுதல் வீதத்தை ஆராய்ச்சி காட்டியுள்ளதால், நாட்டின் வறுமையில் உயர் பிறப்பு விகிதத்திற்கு நேரடியாக காரணம் உள்ளதாக வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1960 களில் இருந்து, நாட்டு மக்களின் கருவுறுதல் வீதத்தை குறைக்க செயல்பட்டது.

Women in the crowded maternity unit
இதன் விளைவாக ஏற்கனவே, மக்கள் தொகை கிட்டத்தட்ட 35 மில்லியனிலிருந்து 110 மில்லியனுக்கு மூன்று மடங்காக உயர்ந்துள்ள நிலையில், இந்த விகிதம் 1969 ல் 6.4 ஆக இருந்து 2020 ல் 2.75 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், கொரோனா தொற்று நான்கு ஆண்டுகள் கடினமான நிலைமைகளின் மத்தியில் வென்ற அந்த வெற்றிகளை தற்போது உடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஒவ்வொரு 10 பேரில் மூன்று பேரின் பிறப்பு திட்டமிடப்படாத கர்ப்பமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மணிலா விரிகுடாவிற்கும் சியரா மாட்ரே மலைத்தொடருக்கும் இடையில் 13 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

2015 முதல் தரவுகளின்படி, சராசரியாக, ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ் பிறப்பு வீத அதிகரிப்பானது வைத்தியசாலைகளில் பெரும் நெரிசல் நிலையை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Hot Topics

Related Articles