உலகம்

ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி கெமரா புத்தாக்கம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் vivo

ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி கெமரா புத்தாக்கம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன்  எல்லைகளை விரிவாக்கிய 2020

முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, புத்தாக்கத்திற்கு நன்கறியப்பட்டது. சக்தி வாய்ந்த கமெரா, புத்தாக்க சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டைலிஷான வடிவமைப்புடன் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாக இது உள்ளது.

கடந்த சில காலங்களாக செயற்கை நுண்ணறிவினால் வலுவூட்டப்பட்ட Quad cameras, In-Screen Fingerprint Scanners, Superb HD திரைகள், Turbo mode, Flash charge என தொழிற்துறையில் முன்னணியான பல புதிய போக்குகளை உருவாக்கிய தொழில்நுட்பங்களை பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டில், சிறந்த மொபைல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் இளையோரின் மனங்களை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய V வரிசை மூலம் முத்திரை பதித்துள்ளது.

தொடர் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களின் வளர்ச்சியடைந்து வரும் தேவைக்கேற்ற வகையில் மாறி வருவதுடன், மொபைல் புகைப்படவியலுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், புகைப்படவியலில் நுணுக்கங்களை நன்கு புரிந்து வைத்துள்ளது.

vivo என்பது அர்த்தமுள்ள புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளின் உணர்வை வளர்ப்பதற்கான ஒரு இளம் மற்றும் எதிர்காலத்துக்கு தயாராக இருக்கும் வர்த்தகநாமம் ஆகும்.

பாவனையாளர்களின் அன்றாட வாழ்க்கையின் நீட்சியாக ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் vivo வருடத்தைத் தொடங்கியது.

வாடிக்கையாளர் நுண்ணறிவினை அடிப்படையாகக் கொண்டு, vivo புகைப்பட ஆர்வலர்களுக்கு உதவக்கூடிய கெமராவை மையமாகக் கொண்ட சிறப்பம்சங்களைக் கொண்டு வந்துள்ளது.

முன்புற கெமராவே V தொடரின் மகுடமாகத்  திகழ்கின்ற போதிலும், அனைத்து சாதனங்களும் சக்தி வாய்ந்த பின்புற கெமராக்களை ஆர்வமுள்ள புகைப்படவியலாளர்களுக்காக கொண்டுள்ளது.

இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட vivo V19   வாழ்வின் அற்புதமான தருணங்களை ஸ்டைலாக படம்பிடிக்க 8MP AI Quad rear Camera, 8MP Ultra Wide-Angle Camera, 2MP Macro Camera மற்றும் 2MP Bokeh Camera ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

இவற்றோடு  நேர்த்தியான செல்பிக்காக 32MP+8MPDual Front Camera இனையும் vivo V19 கொண்டுள்ளது. AI Night Selfie தொழில்நுட்பம் மற்றும் Face Beauty வழிமுறைகளால் வலுவூட்டப்படும் Super Night Selfie பயன்முறையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

உணவுகளை புகைப்படம் எடுத்தல், வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தல், இரவு நேர புகைப்படம் எடுத்தல் அல்லது வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சியான தருணங்களைக் கிளிக் செய்யும் அனைவருக்கும் இது ஆர்வத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆண்டு, புதிய V20 முதன்மைத் தொடர் vivoவின் புத்தாக்க வரலாற்றில் அண்மைய மைல்கல்லாகும், ஸ்மார்ட்போன் செல்பி திறன்களின் புதிய உலகத்தைத் திறக்கிறது.

vivo V20, தொலைதூர மற்றும் அருகிலுள்ள பொருள்கள் மீது விரைவாக மற்றும் புத்திசாலித்தனமான கவனம் செலுத்துவதற்கான அறிவுபூர்வமான AF tracking  தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு அட்டகாசமான 44MP Eye Autofocus ஐக் கொண்டுள்ளது.

இது ஒரு ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு அதன் 64MP Main Camera + 8MP Multi-Function Camera + 2MP Mono Camera மூலம் வாழ்க்கையின் சிறப்பு தருணங்களை  பல வழிகளில் பதிவு செய்ய வலுவூட்டுகின்றது.

குறைந்த ஒளி கொண்ட சூழ்நிலைகள் மற்றும் இரவு நேர படங்களை அசத்தலாக படம் பிடிக்க, tripod மூலம் படம் பிடிப்பதற்கான ultra-night mode, wide-angle night scenes மற்றும் city night filters போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

vivoவின் V தொடரின் முதன்மையான சாதனமான V20 SE, அதி நவீன கெமரா தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இரவு நேரத்திலும் தெளிவான, பிரகாசமான படங்களைப் பிடிக்க Aura Screen Light  உடன் கூடிய 32MP Super Night Selfie cameraவினை கொண்டுள்ளது. vivo V20 SE, 48MP AI Triple கேமராவை வழங்குகிறது, இது புகைப்பட ஆர்வலர்களை அதன் சக்திவாய்ந்த அம்சங்களுடன் அசரவைக்கும் தெளிவான படங்களை எடுக்க அனுமதிக்கிறது. Super Wide-Angle மற்றும் Super Macro பயன்முறையுடன் பகல் முதல் இரவு வரை அனைத்தையும் தெளிவான விவரங்களுடன் தடையின்றி பிடிக்க முடியும்.

vivo 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து புத்தாக்கங்களின் எல்லைகளை விரிவாக்கி வருகின்றது.

vivo தனது ஸ்மார்ட்போன்களில் வீடியோகிராபி மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், இலங்கையில் புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் வளர்ந்து வரும் படைப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனித்துவமான முறைகளை அறிமுகப்படுத்துகிறது.

vivo தொழில்நுட்ப மேம்பாட்டு செயன்முறையில் புதிய வரையறைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதுடன், அதன் பாவனையாளர்களுக்கு எல்லையற்ற சாத்தியங்களைக் கொண்ட ஒரு உலகத்தைத் திறக்கின்றது.

உலகளாவிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப நிறுவனமொன்று உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு இணையாக கெமரா தொழில்நுட்பத்தின் சரியான இணைப்பைக் கொண்டுவருவதன் மூலம் தொடர்ச்சியான முன்னேற்றங்களை உருவாக்குவது அரிதாகும்.

ஸ்மார்ட்போன் கெமராவே எதிர்காலமாகும் என்பதுடன் vivoவின் ஸ்மார்ட்போன்களே எதிர்காலத்தில் நீங்கள் தனித்துவத்துடன் தெரிவதற்கான கருவிகளாகும்.

Hot Topics

Related Articles