உலகம்

வைரஸின் மாறுபாடு இயற்கையானதே – உலக சுகாதார ஸ்தாபனம்

பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தற்போது வேகமாக பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸின் மாறுபாடுகளைப் பற்றி ஆய்வு செய்து வருவதாக ​​அதிகாரிகள் தொடர்ந்து மாறுபாடுகள் பற்றிய தரவுகளைப் பெறுகிறார்கள் என்றும்தெரிவித்தார்.

UK's new COVID measures met with skepticism, confusion - CGTN

பிரித்தானியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸின் புதிய விகாரம் மிக எளிதாகப் பரவும் தன்மை கொண்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரபணு மாற்றங்கள் வைரஸ் செயல்படும் விதத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இது ஒன்றும் புதிதல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

“வைரஸ்கள் காலப்போக்கில் உருமாறும்; அது இயற்கையானது மற்றும் இவ் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. ”

இவ் விடயத்தில் வைரஸ் பரவுவதை விரைவாக கட்டுபடுத்துவது மிகவும் முக்கயமானது என்று டெட்ரோஸ் கூறினார்.

நாம் வைரஸ் பரவுவதற்கு ஏதுவான காரணிகளையும் வாய்ப்புகளையும் மாற்ற வேண்டும், என்றும் அனைத்து அரசாங்கங்களும் குடிமக்களும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். என்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் WHO தொழில்நுட்ப முன்நிலை அதிகாரியான மரியா வான் கெர்கோவ் தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரஸ் மாறுபாட்டிற்கும் பிரித்தானியாவில் உள்ளவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவை வேறுபட்டவை என்றும் தெரிவி்தார்.

Britain cut off from Europe, other countries over new coronavirus strain -  National | Globalnews.ca

வைரஸ் பரவும் முறை மற்றுமே ஒன்றானது, அதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி சமூக இடைவெளியை பேணுவதே என அவர் மேலும் தெரிவித்தார்.

“மற்றொருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களிடையே இந்த வைரஸ் பரவுகிறது,” இதில் மாற்றமில்லலை.

இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன, சமூக இடைவெளி தொடர்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.

ஆனால் வைரஸ் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையே விரும்புகிறது. ” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார அவசரகால திட்ட நிர்வாக பணிப்பாளர் மைக்கேல் ரியான், இதுவரை புதிய வைரஸ் மாறுபாடானது,

“தீவிர நோய் நிலைமையை ஏற்படுத்துமா அல்லது நோய் அறிகுறிகள், தடுப்பூசிகளின் செயற்திறன் ஆகியவற்றை மாற்றும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.

இந்நிலையில் உலகில் 7 கோடியே 84 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதடன் 1,7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகளாவிய ரிதியில்  கொரோனா தொற்றக்குள்ளான 5 கோடியே 51 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள்  இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles