உலகம்

ஒத்துழைப்பின் பங்காளர்கள்: பாலின சமத்துவத்திற்காக ஆண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துதல்

பாலின சமத்துவமின்மை குறிகாட்டியில் அடங்கியுள்ள 189 நாடுகள் வரிசையில் இலங்கை 90 ஆம் இடத்தில் (2019) உள்ளடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பெருவாரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கு இலவச மற்றும் சமமான வகையில் அணுகும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.

Nilmini Herath – Additional Secretary, Ministry of Women and Child Development, Preschools & Primary Education, School Infrastructure & Education Services, Manel Jayamanne – Executive Director, National Committee on Women, Robert Juhkam – Resident Representative, UNDP in Sri Lanka, Hon. Piyal Nishantha De Silva – State Minister, Ministry of Women and Child Development, Preschools & Primary Education, School Infrastructure & Education Services, Shiranthi Beatrice – Chairperson, National Committee on Women, Kumari Jayasekera – Secretary, Ministry of Women and Child Development, Preschools & Primary Education, School Infrastructure & Education Services and Samitha Sugathimala – National Coordinator, Men Enagage Alliance Sri Lanka

எவ்வாறாயினும், கட்டமைப்புசார் தடைகள் மற்றும் தீங்கான சமூகசார் விதிமுறைகள் போன்றன பாலின பாகுபாட்டை தூண்டுவதுடன் – இவ்வாறான பாலின பாகுபாடுகள் எவரையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் – தமது சொந்த இல்லங்களிலும் சமூக மட்டத்திலும் பெண்கள் பெருமளவு பாகுபாட்டை உணர வேண்டிய நிலைக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் (UNDP) தயாரிக்கப்பட்ட  பாலின சமூக நிலை சுட்டெண் (2020) என்பதனூடாக, உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான  பரந்தளவு பக்கசார்பான நிலைப்பாடு ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது.

Hon. Piyal Nishantha De Silva, State Minister of Women and Child Development, Preschools & Primary Education, School Infrastructure & Education Services

ஆய்வின் பிரகாரம், 75 நாடுகளில் நேர்காணலுக்குட்படுத்தப்பட்டிருந்த 30% ஆண்கள் மற்றும் பெண்களில், ஆண் ஒருவர் தமது துணையை அடிப்பது காரணப்படுத்த முடியும் என்பதற்கு உடன்பட்டிருந்தனர்.

‘Broadening Gender: Why Masculinities Matter’ (2013) எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் போது, தமது வாழ்நாளில் ஏதேனும் ஒரு வகையான வன்முறையை நெருக்கமான பங்காளர் மீது மேற்கொள்ள நேரிட்டதாக இலங்கையின் 20% ஆண்கள் குறிப்பிட்டிருந்தனர். சுமார் 66% ஆனவர்கள் அவ்வாறான வன்முறையை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் தமக்கு இருக்கின்றது எனும் உணர்வின் பிரகாரம் மேற்கொண்டதாக குறிப்பிட்டனர்.

Samitha Sugathimala, National Coordinator, Men Enagage Alliance Sri Lanka

அது போன்று, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த பெண்கள் நலன் ஆய்வின் (Women’s Wellbeing Survey (2019)) பிரகாரம், தமது வாழ்க்கைத் துணையை அடித்து துன்புறுத்துவதற்கு ஆண்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம் என இலங்கையின்  35.3% பெண்கள் உடன்பட்டிருந்தனர்.

தற்போது நிலவும் தொற்றுப் பரவலுடனான சூழ்நிலை காரணமாக, பெண்களுக்கு கொடுப்பனவுகள் அற்ற வீட்டுப் பணி மற்றும் பராமரிப்பு சுமை, பொருளாதார வலுவூட்டல் இன்மை மற்றும் பாலின மற்றும் பாலியல் சார் வன்முறைகளுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிப்பு போன்ற நிலைகளுக்கு அதிகளவில் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

Robert Juhkam, Resident Representative of UNDP in Sri Lanka

2030 ஆம் ஆண்டு எதிர்பார்ப்புகள் நிறைந்த நிகழ்ச்சிநிரலை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு மற்றும் ஆண்கள் ஈடுபாட்டு ஒன்றியம் ஆகியன இணைந்து மும் மொழிகளிலும் ஊடக பிரச்சாரத் திட்டமொன்றை “ஒத்துழைப்பின் பங்காளர்கள்” எனும் தலைப்பில் அறிமுகம் செய்துள்ளன.

இதனூடாக இலங்கையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிமுக நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “வீட்டில் தீர்மானமெடுத்தல் மற்றும் வீட்டு பணிகள் போன்றன சமமாக பகிரப்படுவது அடங்கலாக வாழ்க்கையில் சகல கட்டங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே வளங்கள் மற்றும் வாய்ப்புகள் போன்றவற்றை சமமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் நிலவ வேண்டும்.

பாலின இடைவெளியை இல்லாமல் செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் – தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் என்பது முதல் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என சகல நிலைகளிலும் இலங்கையில் பாலின சமத்துவத்தை எய்துவதற்கு நாம் அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.” என்றார்.

 

பாலின சமத்துவம் என்பது அதன் சுய அபிவிருத்தி இலக்காகும் என்பதுடன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDGs) 45 இலக்குகள் மற்றும் 54 பாலின – சார் குறிகாட்டிகளில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை எய்துவது மற்றும் பாலின இடைவெளியை குறைப்பது போன்றன நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் பன்முனை தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அவற்றை பூர்த்தி செய்வதையும் துரிதப்படுத்தும்.

‘Equal Partners’ – a trilingual media campaign aimed at engaging men and boys to advance gender equality in Sri Lanka

நிலைபேறான உலகை உருவாக்குவதில் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ரொபர்ட் யூகம் கருத்துத் தெரிவிக்கையில், “மனித அபிவிருத்திக்கு பாலின சமத்துவமின்மை என்பது பாரிய தடையாக அமைந்திருப்பதுடன், கோவிட்-19 காரணமாக உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவம் தொடர்பில் எய்தியிருந்த முன்னேற்றம் தற்போது பின்தள்ளப்பட்ட வண்ணமுள்ளது.

பரந்தளவில் ஒன்றிணைந்த நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி கட்டியெழுப்புவதற்கு பெண்களை பின்தள்ளும் பாகுபாட்டுடனான குணவியல்புகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன தடுக்கப்படாத வகையில் செய்யல்பட வேண்டும்.” என்றார்.

 

இந்தத் திட்டத்தில் வீடியோ தொடர்கள் காணப்படுவதுடன், உரையாடல்களும் அடங்கியுள்ளன. இவை நாட்டில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.

திட்டத்தை அறிமுகம் செய்யும் வகையில் ஆண்கள் ஈடுபாட்டு ஒன்றியத்தின் தேசிய ஒழுங்கிணைப்பாளர் சமித சுகதிமால கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமான விடயமாகும்.

“ஒத்துழைப்பின் பங்காளர்கள்” எனும் திட்டத்தினூடாக, பாலின நீதி மற்றும் மனித உரிமைகள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் உலகை கட்டியெழுப்பும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே காணப்படும் சமநிலையற்ற அதிகார உறவுகள் தொடர்பில் விளக்கமளிப்பது மற்றும் பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஆணாதிக்க மற்றும் பாலின பாகுபாடுகளை நீக்கி, சகலரும் சமத்துவம் மற்றும் பாகுபாட்டிலிருந்து விடுபட்டவர்கள் என்பதை உணர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்றார்.

 

“ஒத்துழைப்பின் பங்காளர்கள்” திட்டத்தினூடாக பாலின சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை என்பது உணர்த்தப்படுவதுடன், இந்த தசாப்த கால செயற்பாடுகளில் முன்னுரிமை அடிப்படையில் பின்பற்ற தூண்டப்படும்.

 

அமைப்புகளைப் பற்றி :

வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போராடும் முன்னணி ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அமைந்துள்ளது. 170 நாடுகளிலுள்ள எமது பரந்த நிபுணர்கள் மற்றும் பங்காளர்கள் வலையமைப்புடன் இணைந்து செயலாற்றுவதனூடாக, மக்களுக்கும் புவிக்கும் நீடித்து நிலைத்திருக்கும் ஒன்றிணைந்த தீர்வுகளை கட்டியெழுப்ப நாம் தேசங்களுக்கு உதவுகின்றோம்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் பெண்கள் மற்றும் சிறுவர்களின் தேவைகளுக்கு செவிசாய்க்கும் இலங்கைச் சமூகமொன்றை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.

ஆண்கள் ஈடுபாட்டு ஒன்றியம் என்பது, பாலின சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி போன்றவற்றை மேம்படுத்தி அதனூடாக அனைவருக்கும் ஆரோக்கியமான, நிறைவான மற்றும் பரஸ்பர உறவுகள் மற்றும் தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தக்கூடிய உலகை உருவாக்குவதில் இணைந்தும் தனிப்பட்ட ரீதியிலும் பணியாற்றுகின்றது.

Website link: bit.ly/3h1FADV

Full video series: English | සිංහල | தமிழ்

Hot Topics

Related Articles