உலகம்

இலங்கையில் கொரோனாவால் 15 வயது சிறுவன் பலி! கொரோனா தடுப்பூசிக்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐ.நா உறுதி!

இலங்கையில் நேற்றையதினம் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 15 வயது சிறுவன் உள்பட 2 கொரோனா மாணங்கள் பதிவாகியுள்ளாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 392 பேர் பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும்,

32 பேர் சிறைச்சாலை மற்றும் வெளிநாடுகளில் நாடு திரும்பியவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,059 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணி 34,381 ஆகய உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன 8,578 பேர் நாடளாவியரீதியல் உள்ள கொரோனா தொற்றுக்கான 63 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இலங்கையில் மேலும் 618 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,000 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளான தங்கொட்டுவ பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன்   ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொவிட் 19 தொற்று நியூமோனியா, குருதி விசமானமை மற்றும் கடுமையான லுகேமியா நோய் நிலை என அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு – 07 பகுதியை சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் கடந்த 20ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொவிட் 19 நியூமோனியா நோய் நிலைமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐ.நா உறுதி!

கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர்.

பல நாடுகள் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கைக்கு இத்தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உறுதியளிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.
‘இந்த சவால் மிகுந்த காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு மிகுந்த கடப்பாட்டுடன் இருப்பதாக ஹனா சிங்கர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கொவெக்ஸ் வசதியின் கீழ் கொவிட்-19 நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி தயாரிப்பிற்கேற்ப தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் அணுகுமுறையை துரிதப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த நாடுகளின் மக்கள் தொகையில் குறைந்தது 20 வீதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என ஏற்கனவே தெவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பண்டிகைக்கால கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு கோரிக்கை..!

Kandakadu cluster can be contained – DIG Ajith Rohana | Daily News
எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு இலங்கையின் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

பண்டிகைக்காலத்தில் கொவிட் 19 நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக இருக்கிறது. எனவே இயலுமானரையில் தனிமைப்படுத்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles