உலகம்

‘அண்ணாத்த’ படக்குழுவில் 08 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு கொரோனா பரிசோதனை

ஐதராபாத்தில் நடந்து வரும் ‘அண்ணாத்த’ படக்குழுவில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தடன் படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது. இதில் ரஜினிக்கு தொற்ற இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது.

இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரஜினி கொரோனா சோதனை செய்து தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினி சென்னை திரும்ப இரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hot Topics

Related Articles