உலகம்

பிரித்தானியா விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை!

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வரும் விமானங்களுக்கு நாளை (23) அதிகாலை 2.00 மணி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரித்தியானியாவில் கடந்த சில நாட்களாக பிறழ்வுகுட்பட்ட கொரோனா வைரஸ் தொற்ற அதிகரித்துவரும் நிலையில் அங்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் பிரித்தானியாவுக்கான தமது விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. தற்போது இலங்கையும் அந்தப்பட்டியலில் இணைந்துள்ளது.

பிரித்தானியாவில் இதுவரையில் 20 லட்சத்து அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதோடு 67 ஆயிரத்து 401 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles