உலகம்

தாய்லாந்தின் கடல் உணவு சந்தையில் கொரோனா தொற்று – 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை!

தாய்லாந்தின் மிகப்பெரிய கடல் உணவு சந்தையில் இறால் விற்பனைசெய்த பெண்ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த சந்தையுடன் தொடர்புடைய 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த உள்ளதாக தாய்லாந்து அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

இறால் விற்பனையாளரான 67 வயதான பெண் வியாழக்கிழமை கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தற்போது மகாசாய் சந்தை மற்றும் துறைமுகத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டள்ளது.

பெரும்பாலான தொற்றாளர்கள் அண்டைய நாடான மியான்மரில் இருந்து குடியேறிய தொழிலாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தையைச் சுற்றியுள்ள மியான்மர் தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Covid-19: Thailand tests thousands after virus outbreak in seafood market - BBC News
ஞாயிற்றுக்கிழமை மட்டும் மகாச்சியுடன் தொடர்புடைய 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் மீன் சந்தை கொத்தணிக்கு முன்னர், தாய்லாந்தில் 4,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் அங்கு கொரோனா தொற்று காரணமாக 60 இறப்புகள் பதிவாகியிருந்தன.

எனினும் தற்போது ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles