உலகம்

இலங்கையில் கொரோனாவால் மேலும் ஐவர் பலி! மேல் மாகாண எல்லைகளை தாண்டி பயணிக்க வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள்!

இலங்கையில் நேற்றையதினம் 17 மாவட்டங்களை சேர்ந்த 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 5 கொரோனா மாணங்கள் பதிவாகியுள்ளாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் அடையாளம் காணப்பட்வர்களில் 101 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 67 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 46 பேர் களுத்துறை மாவட்டத்திலும், 35 பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன்குருநாகலை மாவட்டத்தில் 26 பேரும் கண்டி மாவட்டத்தில் 25 பேரும், அம்பாறையில் 23 பேரும் காலி மாவட்டத்தில் 12 பேரும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,631ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன 8,823 பேர் நாடளாவியரீதியல் உள்ள கொரோனா தொற்றுக்கான 63 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இலங்கையில் மேலும் 415 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,682 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று காலை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவரின் மரணங்கள் பதிவாகியிருந்தது.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட மரணங்களில் வெலிகடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் உட்பட ஐந்து இறப்புகளும் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

68 வயதான கைதி டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு -19 ஐச் சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் டிசம்பர் 19 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணம் கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிறுநீரக தொடர்பான பிரச்சினைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மரணம் டிசம்பர் 19 ஆம் திகதி மாகோனாவைச் சேர்ந்த 63 வயது பெண் தனது வீட்டில் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று, நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியவற்றால் குறுதி விஷமானமைஆனமை இறப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்கா நகரைச் சேர்ந்த 77 வயது ஆண் டிசம்பர் 18 ஆம் திகதி அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் குறுதி விஷமானமை மற்றும் இதய நோய் இறப்புக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு -10 ஐச் சேர்ந்த 83 வயது ஆண் ஒருவர் டிசம்பர் 20 ஆம் திகதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுடன் நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அசராங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 21 பேர் தீவிர சிகிச்சைப்பிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேல் மாகாணத்திலிருந்து வெளியேர வேண்டாம் – சுகாதார மேம்பாட்டு பணியகம்

பண்டிகைகாலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் மாகாண எல்லைகளை தாண்டி பயணிக்க வேண்டாம் என  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்ற பகுதிகளுக்கும் பரவுவதால் அச்சுறுத்தல் இருப்பதால் இவ் பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேல் மாகாணத்திலிருந்து அவசர தேவைகளுக்கு மட்டும் ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் பாலிதா கருணாபேமா தெரிவித்தார்.

 

 

 

Hot Topics

Related Articles