உலகம்

இந்திய பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஒன்லைனில் விற்க முயன்ற கும்பல் கைது!

இந்திய பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை ஒன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் விற்பனைசெய்ய முயன்ற கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியபிதமர் மோடியின் தொகுதி அலுவலகமான வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவை கொண்ட கட்டிடமே இவ்வாறு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

மேலும், மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடம் விற்பனைக்கு என தெரிவித்து வலைத்தளத்தில் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 7 கோடியே 50 லட்சம் இந்திய ரூபாவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து உத்தரபிரதேச பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அலுவலக கட்டிட புகைப்படத்தை விற்பனை தளத்தில் பதிவேற்றம் செய்த 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hot Topics

Related Articles